Total Pageviews

Wednesday, January 19, 2011

தேவர் திருமகன் - வைகோ உரை 1


தேவர் புகழ் வாழ்க :எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!



வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் எதிர்க்க இயலும் என்ற நக்கீரன் பெருமை பேசுகின்ற இம்மாசிவீதியில், எத்தனையோ கூட்டங்கள் நான் பங்கேற்று இருந்தாலும், இன்றைய நாளில், 2007 அக்டோபர் திங்கள் 30 ஆம் நாளில், தேவர் திருமகனாரின் புகழ் பாடுகின்ற மேடையில் உரை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கின்ற பார்வார்டு பிளாக் கட்சிக்கும், நான் மதிக்கும் அருமைச் சகோதரர் சந்தானம் அவர்களுக்கும், என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.


எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி...


இலட்சோப இலட்சம் மக்கள் இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தார்கள். நான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே படித்த, 'எல்லாச் சாலைகளும் ரோமபுரியை நோக்கி..' All the roads lead to Rome. என்ற ஆங்கில வரிகளை எண்ணிப் பார்க்கிறேன். இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்க்கிறபோது, 'All the roads lead to Pasumpon. 'எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி..' என்று சொல்கிற அளவுக்கு, இலட்சோப இலட்சம் தமிழ் மக்கள், இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தனர். தேவர் திருமகனாருக்குப் புகழ் மகுடம் சூட்டுவதற்கு, மரியாதை செலுத்துவதற்கு பக்திப் பரவசத்தோடு உலவியதையும் கண்டு, பதவி மகுடங்களைத் தேடாமல், வந்த பதவிகளையும்கூட நாடாமல், அதிகார பீடங்களை அலங்கரிக்காமல், இன்றைக்குச் சரித்திரத்தில் கோடிக்கணக்கான மக்கள் போற்றுகின்ற ஒரு தலைவனாக தேவர் திருமகனார் திகழ்கிறார்!




30 ஆண்டுகளாக..


அவருடைய பெருமை பேசுவது, நமது பாதையைச் சரி செய்வதற்காக! ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் தலைவனை மதித்து. 31 ஆவது ஆண்டாக பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்குச் சென்றேன். அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டிலும், 2002, 2003 இந்த மூன்று ஆண்டுகள் தவிர்த்து, ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்கள் 30 ஆம் நாள், பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னாலே நான் பசும்பொன்னுக்குச் சென்று கொண்டு இருந்த காலகட்டத்தில், வேறு அரசியல் தலைவர்கள் எவரும் வராத அந்தக் காலத்தில், வீர மறவர் குல மக்களும், முக்குலத்து சமுதாயத்து மக்களும், தங்கள் குலதெய்வத்தை வழிபடப்போவதைப்போல வந்து கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில், நான் அவர் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அடக்கமான இடத்துக்குச் சென்றதற்குக் காரணம், நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல, அவர் இலட்சியங்களுக்காக அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஒழுக்கம் நிறைந்த தலைவர்,

தனிமனித ஒழுக்கம் வாய்ந்த தலைவர்; பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்த தலைவர்; விவேகானந்தரைப்போல வாழ்ந்த தலைவர்; வடலூர் வள்ளலாரைப்போல துறவு மனப்பான்மையோடு இயங்கிய தலைவர்; அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாகத் திகழ்ந்த தலைவர்; ஆகவேதான், அந்தத் தலைவனை மதித்து, அவருக்குப் போற்றுதலும் மரியாதையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே சென்று வந்து இருக்கிறேன்.

உயரம் பெற..உள்ளம் உறுதி கொள்ள.. :

எத்தனை சோதனைகள் வந்தாலும் உள்ளத்தில் இருக்கின்ற உரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, நெஞ்சில் தேங்கி இருக்கக்கூடிய துணிச்சலை வளர்த்துக் கொள்வதற்காக, பசும்பொன் தேவர் திருமகனாரின் திருவிடத்துக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் மிகச்சிறிய வயதில், அரைக்கால் சட்டை அணிந்த பள்ளிக்கூட மாணவனாக என்கிராமத்தில் என் பாட்டன் கட்டிய வீட்டில் பசும்பொன் தேவர் திருமகனார் திருவடி படுகிற பேறு பெற்ற வீட்டில் அவரைப்பார்த்தேன்.

பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்






ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
 
ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். 

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.


ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.


அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை  ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.



நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

 
உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

       - பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர்

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்


-பி.ஏ. கிருஷ்ணன்




"நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: 'உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.' "

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
 
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.


புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது "இராணுவ நினைவுகள்" நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

"இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்."

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

"(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்."

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

"தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை."

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

"இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்."
 
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது 'புலிநகக் கொன்றை'யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
 
"மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே."


மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

கோர்லே கூறுகிறார்:

"பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன."

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

"எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். "Dummy" என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். 'நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?'

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!"

எனக்கு "கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே" என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்."

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. "Everything again favours the French Emperor". 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
 
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்


அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் "ஸ்மிருதி சந்திரிகை"யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:



1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

2. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய 'காலச்சுவடு' இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் 'பி.ஏ. கிருஷ்ணன்' அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
 

சீவலப்பேரி பாண்டி



சீவலப்பேரி பாண்டி சௌபா NIL பத்திரிகைத்துறையில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிபெற்ற ஜூனியர் விகடனில், வாசகர்களின் பெரும் ஆதரவு பெற்றவை கிராமத்துப் பக்கங்கள்! நாடு விடுதலை அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதும் கிராமங்களின் பல்வேறு பிரச்னைகளும் அந்தப் பக்கங்களில் ஒலித்தன. அதோடு கிராமத்தின் கலாசாரமும் அதில் இடம்பெற்றது. கிராமத்துச் சோகமும் சிரிப்பும் அதில் எதிரொலித்தன. அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்களும் கதைகளாக வந்திருக்கின்றன. அதில், 'செளபா' எழுதிய சீவலப்பேரி பாண்டி தொடர் மிகவும் புகழைப் பெற்றது. அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள்... எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய கிராமத்து வீரமகன் ஒருவனின் வாழ்க்கை சில சுயநலவாதிகளால் திசைதிருப்பப்பட்டு, அவன் கொலைகாரனாகிவிட்ட கதை. கதையின் கடைசியில், பாண்டி செத்து வீழ்கிறபோது போலீஸ் அதிகாரி பிரேம்குமார் மட்டுமின்றி நமக்கும் பாண்டியின் இதயத்துக்குள் மனிதநேயம் தெரியத்தான் செய்கிறது. க‌த்திமேல் ந‌ட‌ப்ப‌துபோல‌ எச்ச‌ரிக்கையுட‌ன் எழுத‌வேண்டிய‌ க‌ட‌மை செள‌பாவுக்கு இருந்த‌து. அதைச் செவ்வ‌னே செய்தார். தெற்க‌த்திய‌ தீந்த‌மிழ் ந‌டை அவ‌ருக்கு கைவ‌ந்த‌து. தொட‌ருக்கு மேலும் உயிரூட்டிய‌து. விக‌ட‌ன் மாண‌வ‌ர் திட்ட‌த்தில் 'க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌' செள‌பா, இன்று தேர்ந்த‌ எழுத்தாள‌ராக‌ உய‌ர்ந்திருப்ப‌து விக‌ட‌னுக்குப் பெருமை.

தேவர் போற்றி --(நெல்லை கண்ணன்)




தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது
விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை

வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்
விருதுநகர் இருக்காது என உரைத்தார்
அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்


நன்றி : -(நெல்லை கண்ணன்)

தேவரின் நாடாளுமன்ற முழக்கம்


தேவரின் நாடாளுமன்ற முழக்கம் :

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி... அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன.
மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.
இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.
ஐயா,
ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட.
காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.
மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும்.
அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.
எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர்.
தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.
கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை


ஐ.நா.வின் சமாதானம், அமைதி எல்லாம் பேச்சோடு சரி - அதன் செயல்களெல்லாம் அமைதியை சிதைப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஐ.நா. சபை இரண்டாவது சர்வதேசச் சங்கம் என்ற நிலைமைக்கு மேற் போகவில்லை - போகாது.

ஜனநாயகம் வந்துவிட்டது - அது சக்திமிக்கது; அதன் பயனாய் மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரமும், மனப்பாங்கும் உயர்ந்துவிட்டது. எனவே ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுக்காது. ஒரு நாட்டிற்குள் ஒரு நாடு பலவந்தமாய்ப் பிரவேசிக்காது - பிரவேசிக்கும் என்ற கனவு கூட இனி எவருக்கும் தோன்றாது என்றெல்லாம் அகிலமளாவ பிரச்சாரத்திருக்கிறோம்.
ஆனால் நடப்பது என்ன? ஜனநாயகத்திற்கும், அதன் வழி செல்லும் மனிதப் பாங்கிற்கும் எது ஆகாதோ அது நடக்கிறது. ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுத்தது. அதைப் பார்த்துக் கொண்டு ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா சும்மா இருந்தது. சூயஸ் சம்பவத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.

சூயஸ் சம்பவம் மேலும் தொடராது - ஜனநாயக சக்தி தடுத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், அதே சூயஸ் நிகழ்ச்சி லெபனானில் ஏற்பட்டது! சூயஸ் நிகழ்ச்சிக்கு சும்மா இருந்த நமது ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா லெபனான் நிகழ்ச்சியின் போது சும்மா கூட இருக்கவில்லை.

சூயஸ் முற்றுகையில் பிரிட்டன் கொட்டிய கொடுமையை விடக் கோரமாகக் கொட்டிற்கு - லெபனானில் தனது வலிமை மிக்க ஆறாவது கடற்படையையும், போர்க் கப்பல்களையும் காட்டி, சின்னஞ்சிறு நாடான லெபனானைக் கோரத்தனமாய்ப் பயமுறுத்திற்கு அமெரிக்கா.

ஜனநாயகமே ஜனநாயகத்தை எதிர்த்துச் சண்டைக்கு மார்தட்டும் நிலைமையை அமெரிக்காவின் மூலம் கண்ட லெபனான், தான் வலிமையிலும், அளவிலும் மிகமிகச் சிறிதாக இருந்தாலும், ஜனநாயகத்தையும் மக்கள் சக்தியையும் நம்பி அமெரிக்காவின் சவாலை ஏற்று அதைக் களத்தில் சந்திக்க கச்சை கட்டிற்று.

லெபனானின் இந்தச் துணிச்சலான எதிர்ச் சவால் அமெரிக்கா மூட்டிவிட்ட பிரச்சனையை அடக்கிற்று. நாடு சிறிதாக இருந்தும் சக்தி பெரிதாக இயங்கி களத்திலிறங்கத் தயாராகிவிட்ட லெபனானுக்கு முன்னே, அமெரிக்கச் சவால் அதிகநாள் நிற்கமாட்டாமல் ஓய்ந்ததை உலகம் அறியும்.

நமது அகிம்சாமுறையில் அகில உலகிலும் ஜனநாயகம் அமைய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி நடப்பது என்ன? ராணுவ சர்வாதிகாரம்!

பாகிஸ்தானில் மட்டுமல்ல - மேலும் சில நாடுகளிலும் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. தாய்லாந்து, பர்மாவோடு இதர நாடுகளிலும் ராணுவ ஆட்சி அமலில் இருக்கிறது. அந்த நாடுகளெல்லாம் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகள். ஆனால் பர்மாவையும் தாய்லாந்தையும் பற்றி நாம் எதுவும் குறிப்பிடுவதற்கில்லை. ஏனெனில் பர்மா, காமன்வெல்த் பிணைப்பில் இல்லை - தாய்லாந்து தென் கிழக்காசிய கூட்டணியோடு (சீட்டோ) இணைத்துக் கருதப்படும் நாடு. ஆனதால் பாகிஸ்தானைப் பற்றி நாம் பிறகு சிந்தித்துக் கொள்ளலாம். ஆனால், இதைப்பற்றி நாம் உடனடியாகச் சிந்தித்தே ஆகவேண்டும். ஏனெனில் அதுவும் நம்மைப்போல் நமது காமன்வெல்த்தில் இணைந்துள்ள நாடு. இந்த நாடு ராணுவ சர்வாதிகாரத்தல் சிக்கியிருக்கிறது. அதை மேற்கு நாடுகளும் அனுமதிக்கக் கொண்டிருக்கின்றன என்றால் நாம் அதில் அதில் எச்சரிக்கையோடு இருந்தாக வேண்டியதோடு, அதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்க வேண்டாமா?

ஜனநாயக வரம்பிற்குட்பட்டது என்பது காமன்வெல்த் கூட்டின் கோட்பாடு. ஆனால், அதில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டில் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. அதை அதற்கு அதி அண்டை நாட்டினரான நாம் அனுமதித்துக் கொண்டிருந்தால், நமது ஜனநாயகத்தை எந்த வகையில் நம்மால் பரிபாலிக்க இயலும்? நம்மை முரட்டுத் தனமான வழியில் இழுக்க வைக்கும் கொடுஞ் சூழ்ச்சி அல்லவா இது? இதோடு நிற்கவில்லை - நிலைமை மேலும் படருகிறது. பாகிஸ்தானில் அந்நியரின் விமான தளங்கள் மட்டும் நிர்மாணிக்கப் பட்டிருக்கவில்லை - புதுமையான பல பயங்கர ஆயுதங்களைக் குவித்து வைக்கும் கிட்டங்கியும், ராக்கெட் தளங்களும் ஆப்கன் மலைகளுக்கு அருகே கட்டப்பட்டிருக்கின்றன! இது எல்லாம் எந்த வகை ஜனநாயகம் என்று மேற்கு நாடுகள், நம்மிடம் விவரித்திருக்கின்றனவோ அறியேன். இது நிற்க, நமது எல்லைப் புறங்களைக் கவனிப்போம்.

நமது குடியரசுக்கு 11வது வயது நடைபெறுகிறது. ஆனால் நமது எல்லைகளை இன்னும் அளவிட்டு வரையறை செய்து வேலி வைத்துக் கொள்ளவில்லை.

ஒரு தனிப்பட்ட சிறு குடும்பத்தினர் கூட பாகப்பிரிவினை செய்து கொண்டுவிட்டால், அவரவர் பாகத்திற்கான பகுதியை சிறு சுவர் எழுப்புவதன் மூலம் பிரித்துக் கொள்கிறார்கள். சுவர் எழுப்பாது போனாலும் தமது பகுதியைப் பிரத்துக் காட்டிக்கொள்ள ஒரு கோடாவது கிழித்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். சொத்து சுகங்களையும் முறைப்படி பிரத்தே தீருவார்கள்.

ஆனால் ஒரு நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 வருடங்களாகியும் எல்லை நிர்ணயங்கூட இன்னும் சரிவரச் செயல்படவில்லை என்பது அதிசயத்திலும் அதிசயம்! இந்த அலட்சிய நிலை பல ஆபத்துகளை பலவித முறைகளில் உற்பத்தி செய்து கொண்டே போகிறது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதுபற்றிக் கேள்வி எழும்போது இன்னும் எல்லைக்கோடு கிழித்தாகவில்லை - அதனால் எதுவும் சொல்வதற்கில்லை - அச்சம்பவங்களை எம்.பி.கள் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.

நமது அரசியல் நிர்ணயத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்பது தெரிந்தும், பாகிஸ்தான் பிரதமரும் நமது பிரதமரும் பேச்சு நடத்திப் பகுதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். இந்தப் பகுதிமாற்ற விவகாரம் அ.நி. சட்டத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்று கேள்விகள் எழுப்பப்பட்டால், "இல்லை இல்லை அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருப்பதால் 3வது சட்டப்பிரிவு அதற்குக் குறுக்கிடாது - எனவே அதைப்பற்றி எந்த சர்ச்சையும் வேண்டாம்" என்று ஒரேடியாக மொத்தத்தில் பதில் சொல்லப்பட்டு விடுகிறது! உண்மையில் அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருந்தால் அதன் பரிகாரத்துக்குச் சட்டமில்லையா?

எதையும் சட்ட முறைப்படி செய்தால் என்ன? சர்க்கார் தரப்பில் செய்யப்படும் எதையும் முறைப்படி செய்வதற்காகவே சட்டம் வகுக்கப்படுகிறது. சட்ட சம்மதமின்றி சுயநோக்கத்துக்கு எதையும் செய்வதாக இருந்தால் சட்டம்தான் எதற்கு?

லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா? என்று கேட்கிறேன்.

மேலம் இந்த எல்லைப் பிரச்சனை, என்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை - நித்தியப் பிரச்சனையாகி வருகிறது. பெரியவர்களின் வாய்களிலிருந்து இம்மாதிரி பதில்கள் வருவதற்கு வேதனைப்படுகிறேன். பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா?

ஆக, எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் நடத்துகின்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் சின்னஞ்சிறிய சம்பவமாகத்தான் தெரியும். ஆனால், ஒரு பெரிய ஆபத்தான மொத்தச் சம்பவத்தைப் பாகிஸ்தானிகள் இவ்விதச் சிறுசம்பவங்களால் உருவாக்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை! சிறிய ஆபத்து பெரிதாக வளரும் மோசமான கட்டத்தில் நாம் நிற்கிறோம் என்பதைச் சொல்லாமல் தீரவில்லை.

1959 ஆம் வருடம் மிக மிக முக்கியமான வருடமாக மாறி இருக்கிறது. இவ்வருடம் 2வது உலக யுத்தத்தைத் தோற்றுவித்த 1939 ஆம் வருடத்தின் மறுபிறவியாக இருக்குமென்று நான் கருதுவதை, பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக சர்க்காருக்கும் அறிவித்துக் கொள்கிறேன். இவ்வருடம் மிக மோசமான வருடம் என்ற அறிவிப்பை சர்க்காரும் நாடு ஒரு எச்சரிக்கையாகக் கூடக் கொள்ளலாம்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்துவிட்டதாக மிகப் பலர் கருதுகின்றனர். அவர்களைக் கருதும்படி செய்திருக்கிறது செய்தியும், அறிக்கைகளும்! செய்தி - அறிக்கை அளவில் 2வது யுத்தம் முடிந்திருக்கிறதேயன்றி உண்மையான செயல் அளவில் அல்ல!

1914ல் ஆரம்பித்த முதல் யுத்தம் 1918ல் முடிந்தது. 1919ல் வார்சேல்ஸ் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானவுடன் இருதரப்பு நாட்டு ராணுவங்களும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பிவிட்டன.

இரண்டாவது உலக யுத்தம் 1939ல் ஆரம்பமாயிற்று. 1945ல் முடிந்ததாகச் சொல்லப்பட்டது. சமாதான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டன. இதற்கப்புறம் முதலாவது யுத்த முடிவு மாதிரி ராணுவம் அவரவர் நாட்டுக்குத் திரும்ப வேண்டியதுதானே? ஆனால் திரும்பவில்லை - நின்ற இடங்களில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சமாதான ஒப்பந்தங்கள் மட்டும் கையெழுத்தாகிவிட்டன. பரஸ்பர உதவி என்ற பெயராலோ, நாங்கள் ஆக்கிரமித்த பகுதி என்ற பெயராலோ, தூதுக் குழுக்கள் என்ற பெயராலோ, வேறு எதோ ஒரு பெயராலோ ராணுவங்கள் நிறுத்தப்பட வேண்டாத இடங்களில் ஒப்பந்தமானதற்கப்புறமும் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஏன்? என்று ஆராய முற்படும் படித்தவர்களுக்கு 2வது யுத்த முடிவில் உட்கட்டு தெரியும்.

நாம் மேற்கத்தியரோடு நேசம் பூண்டிருக்கிறோம். நேச பாவத்திற்கு வழிமுறையும் வைத்திருக்கிறோம். அதன் பயனாய் நாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்புகிறோம். அதே சமயம் நாம் மேற்கத்தியரோடு கொண்டுள்ள உறவுக்கும் அவர்களின் கொள்கைக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் வழியேதான் நமது வழி என்று ஒப்பந்தமெதுவும் இல்லையென்றம் கூறிக்கொள்ளுகிறோம். இந்தமட்டில் சரி. இதுவே உண்மையில் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருக்குமேயானால் வழுக்கல் நிறைந்த இந்த வழியில் நமது அதிசயகரமான அகிம்சைக் கொள்கை எவ்வளவு தூரம் சறுக்கி விழாமல் நடை போட முடியும்?

நாம் கொண்டிருப்பது அகிம்சா முறை - அம்முறையில் தான் நமது திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நமது உறவு, ராணுவத் திட்டத்தை வைத்துள்ள மேற்கத்தியரோடு இருக்கிறது. இந்த வக்கிர போக்கோடு மற்றொரு வக்கிரமும் சேருகிறது. நமக்கு அஹிம்சையும், மேற்கத்தியருக்கு ஹிம்சையும் கொள்கை என்பதோடு நிலைமை நிற்கவில்லை. வழிமுறை, செயல், திட்டம், எல்லாம் நமது பண்பாட்டிற்குரிய சுதந்திர ரீதியில் தயாரிக்கப்பட்டவை என்று கூறிக்கொள்கிற நாம், கோடானு கோடி ரூபாய்களைக் கொண்ட ராணுவ பட்ஜெட்டை வைத்திருக்கிறோம்.

உண்மையில் நமது பாதை அகிம்சைதான் என்றால் இத்தனை கோடி ரூபாய்களை விழுங்கும் ராணுவ பட்ஜெட் ஏன்? அவ்வளவு பெரிய தொகையை தேசிய நலத்திட்டம் போன்ற பல உருப்படியான காரியங்களுக்குச் செலவிடலாகாதா?

நமது நாட்டை நாம்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? என்று கேட்கலாம் - ஒப்புக் கொள்கிறேன். அவ்வாறானால் நம்மிடம் நவீன ஆயுதங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான புதுவித ஆயுதங்களை நிலைமைக் கேற்றவாறு திரட்டிக் கொண்டால், பயங்கரச் சூழ்நிலைகளை அண்டவிடாமல் தடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாதுகாப்பு என்பதன் பெயரால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? இந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருந்தாக மிகப் பழைய ரக ஆயுதங்களை, அதுவும், பிரிட்டன் கம்பெனியில் வாங்குகிறோம். இது ஏதோ விளங்கவில்லை! தாழ்வு நிலையை நோக்கிச் செல்லும் இந்த மாதிரி ராஜதந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

ராஜதந்திரம் என்றால் அதற்கொரு சாமுத்திரிகம், நாகரிகம் கண்ணியம் உண்டு. இம்மூன்றும் இல்லாத ராஜதந்திரத்துக்கு, ராஜதந்திரம் என்ற பெயரை வேண்டுமானால் சூட்டலாம். ஆனால் அது ராஜதந்திரமாகாது. மோசடி நிறைந்த கபடம். ஒரு நாட்டின் எல்லையை ஒரு நாடு வரம்பு மீறித் தாண்டுவது ராஜதந்திரமல்ல - பச்சைத் துரோகம். துரதிர்ஷ்டவசமாக 2வது உலகப் போர் ஒரு தரப்புக்கும் வெற்றியைத் தராமல், ஒரு தரப்பை ஒரு தரப்பு அடக்கிவிட்டது என்ற நிலையை உண்டாக்காமற் செய்துவிட்டது. எனவே இப்பொழுது யுத்தத் தயாரிப்புக்கான இடைக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இருதரப்பினருக்குமே தெரியும். இதோடு மூன்றாவது யுத்தத்திற்கு வித்திட்டுவிட்டேதான் இரண்டாவது யுத்தம் இளைப்பாறப் போயிருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான், முற்றுகையிட்ட படைகள் ஆங்காங்கே நிற்கின்றன - பரஸ்பர உதவிப் படைகளும் ஆங்காங்கே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கியங்கெட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

சமாதானம் வந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இது வெறும் பிரமை, உண்மையில் சமாதானம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலைமையிலாவது நாம் விழிப்புற வேண்டாமா? நம்மை எதிர்நோக்கி வருகிற கோரப் புயலை சமாளிக்கத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டாமா? ஏதோ பேசுகிறோம் - எதையோ திட்டமிடுகிறோம் - எதுவோ நடக்கிறது.

நமது பேச்சு, ஐக்கியத்தில் அழுத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த ஐக்கிய சாதனைக்கு விதமே நமக்குத் தெரியவில்லை. கூடி வாழ்வோம் என்று சுவைபடப் பேசுகிறோம். இதோடு கூட நிற்கவில்லை. இதற்கு மேலும் கடந்து, அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் கொண்டிருக்கிற நாடுகளுக்கு, கூடி வாழும்படி போதனை செய்யவும் போகிறோம். ஆனால் கண்றாவி! அரசியல் ரீதியில் எதிர் மனோபாவம் கொண்டு எதிர்க்குரல் எழுப்பும் நமது சொந்த சகாக்களோடு கூடி வாழ்வதற்கான சைகையைக் கூடக் காட்டவில்லை.

இதற்கு மாறாக நமது அரசியல் எதிரிகள் மீது சந்தர்ப்பம் வாய்க்கையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, உயிர்களை வாங்கத் தயங்கவில்லை. இது ஒரு கோரமான நிலைமையாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் அகிம்சையைக் குப்புறத் தள்ளிவிட்டுத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம் - பலர் மாண்டனர். மறக்கவொண்ணாத அச்சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டுமென்று வேண்டியதை அப்படியே நிராகரித்துவிட்டோம்...

(இதன்போது ஒரு எம்.பி. எழுந்து பம்பாயிலும், ஆமதாபாத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது என்று குறிப்பிட்டார்).

சத்தியத்தின் பெயரால் அது சம்பந்தமான செய்திகளை மக்களுக்குப் பரவவொட்டாமல் அமுக்கியேவிட்டோம். இதுதான் எங்கள் கொள்கை - இப்படித்தான் செய்வோம் - இதுதான் சத்தியமும், அகிம்சையும் என்றால், மகத்தான இந்த நாட்டையும் காங்கிரசையும் எங்கே கொண்போய் நிறுத்துமோ?

நினைக்கவே இனிக்கும் அற்புதம் பெற்ற தத்துவத்தை நாம் வாயில் வைத்திருக்கத் தவறவில்லை. ஆனால், அதைச் செயலுக்கு இறக்கிவிட நாம் விரும்பவே இல்லை; ஜனநாயகத்தின் தரத்தை நாம் ஒரு அளவுக்கேனும் கையாளாது போனாலும் பாதகமில்லை - போகட்டும் - ஆனால் மனித குலத்திற்கு வேண்டிய மனிதத் தரத்தையாவது மடக்கிச் சாய்க்காமல் விட்டுவிட்டால், அதுவே ஒரு பெரும் சேவையும், தியாகமும், புண்ணியமுமாகும்.

ஜனநாயகத் தத்துவத்தைப் பேச்சால் குளிப்பாட்டுகிற நாட்டில் மனிதத் தரத்திற்கே வாய்ப்பில்லை என்ற நிலைமை சகிக்கவொண்ணாததாகும். ஆகவேதான் உங்களைக் கரங்கூப்பி வேண்டுகிறேன் - ஜனநாயகத்தையாவது உங்கள் நோக்கம் போல் எப்படியும் உபயோகித்துக் கொள்ளுங்கள் - மனிதத் தரத்தையாவது கசக்கிக் கன்னவைக்காமல் விடுங்கள் என்று.

கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் - இயல்பு. ஆனால் தேசத்தைப் பற்றிய விஷயங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு.

மதிப்பிற்குரிய இந்தச் சபையில் நெஞ்சு நடுங்கும் பல தியாகங்களைத் செய்த பெரிய மனிதர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். மகத்தான கொள்கைப் பற்றுள்ள புதியவர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ்கார்களாகவும் இருக்கலாம் - இல்லாமலுமிருக்கலாம். ஆனால் கொள்கை பலம் எல்லோருக்குமே உண்டு. கருத்துக் கொள்ளும் உரிமையுமுண்டு. இதை மறந்தோ, மறுத்தோவிட்டு ஒரு உறுப்பினர், இந்து மத்தின் நேர்மை குறித்துப் பேசினால் நீங்கள் அவரை வகுப்புவாதி என்று இலேசாகச் சொல்லி ஒதுக்கிவிடுகிறீர்கள், மற்றொரு உறுப்பினர் முன்வந்து பொருளாதாரத் தத்துவம் பற்றிக் கூறினால், அவரை உங்கள் வாயால் கம்யூனிஸ்ட்டாக்கி விடுகிறீர்கள், வேறொருவர் வேறேதேனும் சொல்லத் துணிந்து முயன்றால், அவரை ஏதேனும் ஒரு கமிட்டிக்குப் பொறுப்புக் கொடுத்து, குல்லாய் மாட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு மோசமான போக்கைக் கொண்டிருந்தால் சக்தி மிக்க எதிர்க்கட்சி எப்படி உருவாகும்? என்று கேட்கிறேன். ஒருக்காலும் முடியாது!

சக்திவாய்ந்த எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பினால் முதலில் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறீர்கள் எனறுதான் சொல்லுகிறேன்.

நமது போக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இங்குள்ள எங்கள் எல்லோரையும் விட உங்களுக்கு அதிகம் தெரியும். ஆனால், தெரிந்தும் எதற்காக விவாதத்திற்குரிய வகையில் போக்கை வைத்திருக்கிறீர்கள என்பதற்கான உண்மையான காரணத்தைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

பாகிஸ்தானில் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து இன்று காலை இந்த சபையில் ஒரு அவசரப் பிரேரணை எழுந்தது. அதற்குச் சரியான முறையில் பதிலளிக்கும் நிலையில் இல்லை - நமது மதிப்பிற்குரிய பிரதமர்! துணிச்சலும் - விஷய விளக்கமும் இருக்க வேண்டிய அவருடைய பதிலில், விக்கி அழவைக்கும் துக்கம்தான் மேவியிருக்கிறது.

"கனம் உறுப்பினர் விவரித்த மாதிரிதான் நிலைமை இருக்கிறது. அதற்காக அவசரத் தீர்மானமும் அவசியம்தான் - ஆயினும் அதை ஏன் கனம் உறுப்பினர் கொண்டு வந்தார் - அதனால் நடைமுறைப் பயன் எதுவுமிராது" என்கிறார் நமது பிரதமர்.

நமது ராணுவம் பாகிஸ்தானுக்குச் சரியான பதில் சொல்லும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதில் உள்ள சக்தி, விஷயத்தில் இல்லை. நமது ராணுவம் மிகமிகச் சக்தி வாய்ந்தது - சாதுர்யம் மிக்கது - வைர உறுதி கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அதைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நமது ராணுவத்தின் மகத்தான சக்தியை நாங்களறிவோம் - நீங்களுமறிவீர்கள் - நாடும் அறியும் - நானிலத்திற்கும் தெரியும். ஆனால், நவீன ஆயுத வசதியைப் பொறுத்துத்தான் பிரச்சனை எழுகிறது. நமது ராணுவத்திற்கு உள்ள சக்தி மிகமிகப் பெரியது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள நவீன ரக ஆயுதங்களின் சக்தியும்! நம்மிடம் உள்ள ஆயுதங்களைவிட ஆயிரம் மடங்கு வலிமையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது - பாகிஸ்தான் - சக்திவாய்ந்த ராணுவம் எவ்வளவு பெரிய சக்தியையும் முறியடிக்கும் திறன் வாய்ந்த ராணுவம் அந்த அளவுக்கு நவீன ரக ஆயுத வலிமையின்றி இருக்கிறது.

இந்நிலையில் நமது ராணுவம், பாகிஸ்தானுக்குப் பதிலுக்குப் பதில் கொடுக்கும் என்று எதை வைத்துக் கூறுகிறீர்களோ தெரியவில்லை. இந்த நவீன ரக ஆயுதத் தேவையைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அது ராணுவ ரகசியம் - அதை நீங்கள் கிளற வேண்டாம் - என்று சொல்லடி கொடுத்து, பிரச்சனையை பிதுங்கவிடாமல் அடக்கிவிடுகிறீர்கள் நம்மிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டே பாகிஸ்தான் எழுப்பிவிட்டுள்ள கொடூரமான நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்று நிஜமாகவே நீங்கள் நம்புகீறர்களா?

முன்பு ஹைதராபாத்தில் நடந்ததே அந்த விவகாரம் என்ன?


சிட்னிகாட்டன் என்ற ஒரு வெள்ளையன், மணிலாக் கொட்டை வியாபாரி என்ற போர்வையில் ஏராளமான ஆயுதங்களைஹைதராபாத்துக்கு விமானம் மூலம் கொண்டு சென்று குவித்தான். இந்த தவறான செயல், குலை நடுங்கும் பயங்கர ரகத்தைச் சார்ந்ததாகும். ஆனால் அதிருஷ்டவசமாய் ஜின்னாவின் மரணத்தையொட்டிய ஒரு நிகழ்ச்சியின் வாய்ப்பில், நமது தளபதி ராஜேந்திர சிங்ஜி நிலைமையை நமது தரப்பு வெற்றியாக மாற்றி, ஹைதராபாத்தில் குவிந்திருந்த சகல ஆயுதங்களையும் நம் வசமாக்கினார் - ஒரே இரவில் போலீஸ் நடவடிக்கையால் இவ்வளவும் சாதித்துக் கொண்டதாகச் சொன்னோம். சரி இதில் இதற்குமேல் உட்புகுந்து கிளற நான் விரும்பவில்லை.

நமது செயலின் முன்னைய வரிசையில் ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்த்துக் கொள்வதற்காக, சைகையின் ரீதியில் கொஞ்சம் தொட்டுக் காட்டினேன். அவ்வளவுதான். இதற்குமேல் அச்சம்பவத்துக்குள் ஊடுருவிச் செல்ல வேண்டியதுமில்லை. ஏனெனில் நீங்கள் எல்லோரும் பெரியவர்கள். ஆனதால் இதன் உள்விளக்கம், உங்கள் விளங்கும் சக்தியை மீறியல்ல, விளங்கிக் கொள்ளவே செய்வீர்கள். எனவே நான் தொட்டுக் காட்டிய ஓர் ஓரத்தின் ஓரத்தோடு இதைவிட்டு விடுகிறேன். ஏனெனில் இவ்வளவுதான் என்னால் சொல்ல இயலும். இயன்றதைச் சொன்ன நான் காஷ்மீர் விவகாரத்திற்கு உங்களை அழைக்கிறேன்.

காஷ்மீர் விவகாரம் எப்படி ஆகிவிட்டிருக்கிறது தெரியுமா?

பாகிஸ்தானை காஷ்மீருக்குள் அனுமதித்துவிட்டு நாம் ஜம்முவில் இருக்கிறோம். இதன் பயனாய் பாகிஸ்தான் ஒன்று மட்டுமல்ல - பாகிஸ்தானுக்குள் ஒரு பாகிஸ்தான் என்ற கதியை அடைந்துவிட்டது பிரச்சனை! பாகிஸ்தானிகள் காஷ்மீரில் இருக்க வேண்டுமென்றே நாம் விரும்பி, அவர்கள் அங்கிருக்க அனுமதியும் கொடுத்து, அதற்காக ஒரு உடன்பாடும் ஆகியிருப்பதாகவே தெரிகிறது...

(இந்த இடத்தில் சபாநாயகர் குறுக்கிட்டு, கனம் உறுப்பினருக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தீர்ந்துவிட்டது - 15 நிமிடங்களுக்கு மேல் பேசி வருகிறீர்கள் என்று கூறினார்.)

அதற்கு முத்துராமலிங்க தேவர் :

"எனக்கு மேலும் 15 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டுகிறேன் - கனம் உறுப்பினர்கள் பலர் தாம் பேச 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதை நான் பார்த்தேன் என்றார்".

(பிறகு இயன்ற வரை கனம் உறுப்பினர் எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ முடியுங்கள் என்றார் சபாநாயகர்)

பின்னர் தேவர் தொடர்ந்து பேசியதாவது :

காஷ்மீர் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்துவிட்டதாக வெகு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானிகள் அக்கிரமித்தது மட்டும்தான் உண்மை - அவர்கள் ஆக்கிமித்தது அவர்களின் சொந்த சக்தியால் மட்டுமல்ல - நமது இணக்கமும் சேர்ந்தேதான்.

காஷ்மீர் படையெடுப்பிற்கு இலக்கானபோது நாம் நமது ராணுவத்தை அனுப்பினோம். ஆனால் தலைமைத் தளபதியான ஜெனரல் கரியப்பா அவர்களைக் கலந்து கொள்ளக் கூட இல்லை. ஏனெனில் பாகிஸ்தான் பெயரால் மேற்கத்தியருக்கு அங்கு தளம் இருக்க வேண்டுமென்பதில் நாம் வேறுபடாததால்! நான் இவ்வாறு கூறுவது அவ்வளவு ருசியாக இராது - கசக்கவும் செய்யும் - என்ன செய்யலாம் உண்மை எப்பொழுதுமே ருசிப்பதில்லை - கசக்கவே தான் செய்யும். அதற்காக உண்மையை மேலோட்டமாக விட்டுவிட்டால் விஷயம் புரையோடிவிடும். உண்மையை உடைத்துப் பார்த்தால் காஷ்மீர் விவகாரம் இப்படித்தான் தெரிகிறது. - அதை நம்பாமல் என்ன செய்வது? இந்த உண்மை நமது நண்பர்களுக்கும் புலப்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்¨! நமது நண்பர்கள் என்று சொல்லப்படுகிற மேற்கத்தியர்தான் விவகாரத்தை விறுவிறுப்பாக்குகிறார்கள் - அவர்களே அதை ஆறவும் போடுகிறார்கள். பிறகு உதவி என்பதன் பெயரால் பலரக உபத்திரவங்களை உண்டாக்கி வைக்கிறார்கள். கடைசியில் அவர்கள் செய்யும் உதவி என்ன தெரியுமா?

மேற்கத்தியவர்களாகிய அவர்களை நாம் நண்பர்களாகப் பாவிக்கிறோம். ஆனால், அந்த நண்பர்கள், நமக்குப் பரம எதிரிகள் யாரோ, அவர்களுக்கு ராணுவ உதவி செய்துவிட்டு, நமக்குள்ள உணவுப் பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உணவு உதவுகிறோம் என்கிறார்கள். அந்த உதவியும் நமது திருப்திக்கு இப்பாலேயே நின்றுவிடுகிறது.

அவர்களின் நண்பர்களாகிய நமக்கு அவர்கள் உதவும் கோதுமை, மூன்றாந்தரம் - நாலாந்தரத்தையும் கடந்ததாகும். அதாவது அவர்களின் குதிரைகளுக்கு போடும் கோதுமையை எடுத்து நமக்கு உதவுகிறார்கள். அதை நாம் உண்பதற்கில்லை - உண்ணவும் முடியாது. அவர்களின் குதிரைகளுக்குப் போடும் கோதுமையை நமக்குத் தந்துவிட்டு, நமது எதிரிகளுக்கு நல்ல ராணுவ சாதனங்களைக் கொடுத்துவிட்டு இரணமே உதவிதான் என்கிறார்கள். நாமும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். வேறு என் செய்யலாம்? செய்வது...?

இங்கு வலதுசாரி இடதுசாரி நிலைமைகளையும், அவர்கள் இயக்கப்படும் விதங்களையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஸ்ரீ இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு ராஜ்யத்தின் முதன் மந்திரி. அவர், அவரது பணியைச் செய்யும்போது ஏதோ சில கடிதங்களை எழுதியிருக்கிறார். இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கிக்கொண்டு, அதை ஓர் ஒழுங்குப் பிரச்சனையாக வளர்த்து லோக்சபைக்குள்ளேயே வரவிட்டு விவாதம் செய்கிறோம்.

ஆனால், அதே சமயம் மத்தாய் விவகாரமும் உள்ளே நுழைந்து ஒரு விவாதத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. ஆனால், இந்த மத்தாய் விவகாரத்தை விவாத அளவிற்கு மேற் போகாமல் நிறுத்திக்கொண்டு, கேரள முதன் மந்திரியின் கடிதப் பிரச்சனையை ஒழுங்குப் பிரச்சனையாக உயர்த்திக் கொள்ளுகிறோம். இது ஏனோ தெரியவில்லை. இவ்வளவு கீழ்நோக்கம் நமக்கு நமது கெளரவத்துக்கு ஒவ்வாததாகும். பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீர அற விவாதித்து முடிவுகட்ட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளது.

இந்த மத்தாய் விவகாரம் என்ன? அதன் உள் அடக்கம் யாது? முந்திரா மோசடி விவகாரத்திற்குப் பின்னர் வெளிவந்துள்ள பெரிய - முக்கிய விவகாரம் இது. அமெரிக்க ஸ்தானிகராலயத்தில் வேலை பார்த்த ஒரு நபர், நமது சர்க்கார் அலுவலகத்தில் உளவறிய அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபரை நாம் அனுமதித்தோம். அவர், அவருடைய வேலையைச் செய்து கொண்டார். அவர் தனக்கு வாய்த்த வாய்ப்பைக் கைவிடுவார் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்?

இந்த விவகாரம் வெளிக்கு வந்த பின்னர், மாபெரும் மனிதரும் நமது மதிப்பிற்குரிய பிரதமருமான நேரு அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. அதில், "என் மனம் சரியில்லாத சமயத்தில் நான் மத்தாயை அனுமதித்துவிட்டேன்" என்று கண்டிருக்கிறது.

இம்மாதிரி மனது தவறும் நிலையும், அதன்போது எதுவும் செய்யும் நிலையும் நமது பிரமரின் மரியாதைக்கு மட்டுமல்ல, அகில ஆசியாவும் கொண்ட வெள்ளையரல்லாத வர்க்கத்துக்கே ஆபத்தானதாகும்.

சாதாரண ஒரு மனிதனுக்கு மனது சரியில்லாமற் போகலாம். கொடலாம். சகஜம்! ஆனால் பெரிய நாட்டின் பிரதமருக்கு - அதுவும் ஐந்தாம் படையினர் கழுகுகள் மாதிரி உளவறிய மூலை முடுக்குவிடாமல் வட்டமிட்டுத் திரியும் இந்த 1959ஆம் வருடத்தின் இக்கட்டான முகப்பில் - நமது தலைமைக் காரியாலயங்கள் தீப்பற்றி எரியும் தீமைகரமான சூழ்நிலைச் சந்தியில் - மனம் சரியில்லாத சந்தர்ப்பம் ஏற்படுவது சகஜநிலையாகாது - அது நாட்டுப் பொதுவுக்கு நல்லதுமல்ல.

இதில் இன்னொரு வேதனைகரமான சம்பவம், அதவாது நமது சர்க்கார் (சிம்லா) அலுவலகத்திற்குத் தீவைக்க இரண்டு தடவை முயன்றும் முடியாமல், மூன்றாவது தடவை முடித்துவிட்டதாகச் செய்திகள் நமக்கு எப்படியும் ஒன்றும் நடவாதது மாதிரி சும்மாதான் இருக்கிறோம். இவ்வளவு பயங்கரமான செய்திகள் வந்து செயலும் முடிகிற வரை நமது சி.ஐ.டி.கள் என்ன செய்தார்களோ தெரியவில்லை.

அடுத்து உணவுப் பிரச்சனை!

இது மிக மோசமான நிலைமையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களே கூறுகிறார்கள். இந்த சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள உணவுப் பிரச்சனை பற்றி இந்தியில் காரசாரமாகப் பேசினார்கள். எனக்கு இந்தி சரளமாகப் பேசவராது போயினும், பேசுவதை ஓரளவுக்குப் புரிந்துகொள்வேன். காங்கிரஸ் உறுப்பினர்கள் உணவுப் பரிச்சனை குறித்துப் பேசுகையில் தோல்வி - தோல்வி - தோல்வி என்று மும்முறை அழுத்தமாக ஆரவாரத்தோடு கூறினார்கள். அவர்கள் அழுத்தமாக இந்தி மொழியில் மும்முறை கூறியதன் அர்த்தத்தை நாமறிவோம். ஆயினும் அரசாங்கம் இப்பிரச்சனையில் வியாபாரத் தோரணையில் ஈடுபடுவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இந்த உணவுப் பிரச்சனையை வைத்துக்கொண்டு அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி வருகிறார்களேயன்றி, இதை தேசத்தின் உயிர்ப் பிரச்சனையாகக் கருதவேயில்லை.

தேசப் பிரச்சனை, அரசயில் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழலாக மாற்றப்பட்ட மோசமான கட்டத்தில், நாம் எதைச் செய்து சமாளிப்பது என்பவையல்லவா ஆய்ந்தறிந்து செய்ய வேண்டும். உணவு வியாபாரம் - நிலங்களுக்கு உச்சவரம்பு என்ற கவைக்குதவாத விவகாரங்களை இழுத்து வைத்துக் கொண்டால் பிரச்சனை என்ன வாகும்?

நில உடைமைகளுக்கு உச்சவரம்பு கட்டுவது உணவு வர்த்தகம் புரிவது போன்றவை எல்லாம் பேசுவதற்கு எளிதாகவும், ரஞ்சகமாகவும்தான் இருக்கும். ஆனால் அதை நடைமுறைப் படுத்தும்போதுதான், பேசுவதில் இருந்த சுலபம் செயலில் இல்லை என்பது விளங்கும். விளங்கிய பிறகும், பேசிவிட்டோமே என்பதற்காக செய்தே தீரவேண்டும் என்று அழுத்தமாகச் செய்யத் தொடங்கினால், அதன் முடிவில் நமக்கு என்ன தெரியும்? தெரியுமா? நாடு ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிவிட்டிருப்பதுதான் தெரியும். அந்த ஆபத்து பொருளாதாரம் சம்பந்தப்பட்டதோடு மட்டும் நில்லாது மக்களின் வெறுப்பையும் கொண்டதாக இருக்கும்.

நாம் ஏற்கனவே அன்னிய ராணுவங்களின் சுற்றுச் சூழ்நிலையில் உருவாகியுள்ள பயங்கரத்தின் நடுவே நிற்கிறோம். இந்நிலையில், வெளி ஆபத்துக்கள் போதாதென்று இது - அது என்பதன் பெயரால் உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்தானா? என்று கேட்கிறேன். நமது திட்டங்கள் சம்பந்தமாய் நம்மிடம் தெளிவான மனோ நிலையோ கொள்கையோ இல்லை. தெளிவற்ற நிலையில் இந்த விபரீதங்களை ஏனோ ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நில உடைமைக்கு உச்சவரம்பு என்று பேசுகிறோம். இதைப் பேசுவதற்கு நாசுக்காகவும் இருக்கிறது. இம்மாதிரி வரம்பு கட்டுவது என்பதை வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அது எல்லாத் துறைகளுக்குமே பொதுவாக இருக்க வேண்டாமா?

நிலங்களுக்கு உச்சவரம்பு என்பது கிராமாந்திரங்களில் ஆரம்பிக்க வேண்டிய விஷயம். ஆனால் நிலங்களுக்கு உச்ச வரம்பை கிராமப் பகுதிகளில் தொடங்குவதற்கு முன், நகர்ப்புறங்களிலல்லவா தொடங்கி வைக்க வேண்டும். அதுவும் கனம் பிரதம மந்திரியின் சம்பளத்திலிருந்தல்லவா ஆரம்பமாக வேண்டும்? நிலவுடைமைக்கு உச்சவரம்பு கட்ட விரும்புகிற பிரதமர், முதலில் தமது சம்பளத்திற்கு உச்சவரம்பு கட்டிக்கொண்டு, அதற்கடுத்து நகர்ப்புற வருமானங்களுக்கு வரம்பிட்டு, அதன்பிறகு கிராமங்களுக்குப் போனால், கடமை எளிதாக நிறைவேறுமென்று கருதுகிறேன்.

ஏன் இதைச் செய்யவில்லை - செய்யக்கூடாதா? உச்சவரம்பு என்ற முறையை ஏற்படுத்தும் நீங்கள் அதற்கு ஒரு தரத்தை வரையறை செய்யவேண்டும். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் வரையறை செய்யாமல் எடுக்கப்படும் எந்த முயற்சியும் சரிவரச் செயல்படுமென்று நான் கருதவில்லை.

உச்சவரம்பு என்ற கொள்கையின் செயல்பாடு முதலில் நகரங்களில் ஆரம்பமாக வேண்டும். அப்புறம்தான் அதை கிராமங்களுக்கு இழுக்க வேண்டும். இதன்றி, நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள், இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ திரட்டலாம் - சேமிக்கலாம் - எவ்வளவு செல்வத்தோடும் சுகிக்கலாம் - என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சமநிலை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் என்பதோடு, நமது நாட்டுக்குச் சொந்தமான மொத்த மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

அந்த நிலையில், மேற்கத்தியர் முன்பு இங்கு ஆடிப்பார்த்த விளையாட்டை நீங்கள் மறுபடியும் ஆடிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்பது உறுதியாகிவிடும்!

ஆகவே, இடதுசாரிகளிடம் திட்டமில்லை - கொள்கை இல்லை என்றோ, இது பிழை, இது கேடு என்றோ வழக்கம் போல் இதிலும் எதையேனும் சொல்லிவைக்காமல், இந்த உச்சவரம்புப் பிரச்சனையில் நடுநிலையில் நின்று, நடுநோக்கோடு ஆராய்ந்து செயல்படும்படி அக்கறையோடும் அழுத்தத்தோடும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

பொறுப்பின்றியும், சரியான காலநிலை தவறியும் பேசி வைக்கும் இடதுசாரியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக வலதுசாரிகள் மனத்திற்குத் தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் வயப்படுத்திவிடாதீர்கள் என்று, பொறுப்பின் பெயரால் வேண்டி, எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

இதுவே நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நிகழ்த்திய முதல் முழக்கமாகும்.


 நன்றி : குவைத் பாண்டியன்

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு


முன்னுரை:




குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,

பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது.



அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.

விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன்,

கல்லணையைக்கட்டிய கரிகாலன்,

மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே!



உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன.



இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.

பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

கள்வன் ராஜ ராஜன்" என்றும், "களப ராஜராஜன்" என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் – கள்ளரே! ஆவார்.


இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை "களப ராஜராஜன்" என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை "கள்வன் ராஜ ராஜன்" என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள "களப" என்ற வார்த்தை "களவ" என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.






களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் "தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது" பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:

"தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………"

பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:



"விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு"(குறள் 775)



பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.



"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" (குறள் 774



பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.

மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.



தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது.





1. பாண்டிநாடு

2. பல்லவநாடு

3. சேரநாடு

4. இலங்கை

5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்

6. வேங்கி

7. சாளுக்கியநாடு

8. சக்கரக்கோட்டம்

9. கலிங்கம்

10. கங்கபாடி

11. நுளம்பப்பாடி

12. குடகு

13. கேரளம்

14. கொல்லம்

15. மாநக்கவாரம்

16. மாப்பாளம்

17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்

18. கடாரம்

19. சாவகம்

20. இலாமுரிதேசம்

21. சிறீவிசயம்

22. கருமனம்

23. புட்பகம்

24. யவனம்

25. மிசிரம்

26. காழகம்



27. புட்பகம்

28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்

29. அங்கம்

30. வங்கம்

31. கோசலம்

32. விதேகம்

33. கூர்சரம்

34. பாஞ்சாலம்

35. இடைதுறைநாடு

36. வனவாசி

37. கொள்ளிப்பாக்கை

38. மண்ணைக்கடக்கம்

39. மதுரமண்டலம்

40. நாமணக்கோணை

41. பஞ்சப்பள்ளி

42. மாசுணிதேசம்

43. ஒரிசா(ஒட்ட விசயம்)

44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்

45. பண்ணை

46. மலையூர்

47. இலங்கா சோகம்

48. இலிம்பிங்கம்

49. வளைப்பந்தூறு

50. தக்கோலம்

51. மதமாலிங்கம்

ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.



வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, "சேனர் பரம்பரை" ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.("தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே" என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்.



""களவர்" என்ற வார்த்தை மருவி "களபர்" என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.

மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.

அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:

பாடல்: "மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்……………….."



பொருள்:

1)அம்பெய்யும் பொறி

2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி

3)கல்லெறியும் கவண்

4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்

5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்

6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை

7)கல்லும் கவணும் வைக்கும் கூடை

8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்

9)சங்கிலி

10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி

11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1

2)திடீரென பாயும் அம்புக்கூட்டம்

13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி

14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்

15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள்

16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்

17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்

18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்

19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்

20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.



கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய "தொண்டைமான் வம்சாவளி" என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று "இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-



1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி" என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் "தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி" என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)



2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)



3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்.



4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்)



5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.



6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.

7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..



8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்

கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன.



இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். "களப" என்ற வார்த்தையும் "கள்வன்" என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் "களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய "கள்வன்" என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்

கப்பலோட்டிய தமிழன் யார்?


நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.


"தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு

ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை "சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி" என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்" என்று "விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்" என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.

அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?

வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!

தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.

1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.

தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.

"சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி" என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – "தேவர் முரசு", செப்டம்பர் 1981.

(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)

என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.

வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?

சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?

தேசியச் செம்மல்:

1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.

இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).

இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?

எந்த அடிப்படையில் எழுதினார்?

இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?

உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

("செக்கிழுத்த செம்மல்" திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)

எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.

Popular Posts

Pages

Popular Posts