Total Pageviews

Sunday, November 27, 2011

காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்

 

பிரபல காமெடி நடிகர் விவேக். இவர் தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடந்தது. இதில் விவேக் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது. இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது. படப்பிடிப்பில் அதை கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனக்கு சவாலான படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Friday, November 25, 2011

Thursday, November 24, 2011

Wednesday, November 23, 2011

விவேக்கின் சாதனை

 

இதுவரை பத்து லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு விட்டார் விவேக். இந்த வருடம் டிசம்பருக்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விவேக்கிடம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்திருந்தது வாசர்களுக்கு நினைவிருக்கலாம். அவர் கூறிய இந்த பத்து லட்சத்தைதான் கடந்த மாதமே நிறைவேற்றிவிட்டார் விவேக். ஆனால் இன்னும் பல்வேறு ஊர்களில் இந்த திட்டத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் அவர். டிசம்பர் மாதத்தில் கடலு�ரில் இந்த பணியை நிறைவு செய்கிறாராம் விவேக். இந்த விழாவில் அப்துல் கலாமும் கலந்து கொள்ளவிருக்கிறார். இதுவரை எல்லா ஊர்களிலும் மரங்களை நட்டு வந்தவர், சிலரது அன்பு கட்டளையால் சில கோவில்களுக்குள்ளும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் இருக்கும். அதை தல விருட்சம் என்பார்கள். விவேக்கும் இப்போது மரங்களை நட்டிருப்பதால் அதை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ?

Tuesday, November 15, 2011

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் -அகிம்சை புலிகள் கட்சி

 

அகிம்சை புலிகள் கட்சியின் சார்பாக அனுசரித்த தெய்வத்திரு வெள்ளைச்சாமித் தேவர் அவர்களின் நினைவுப் பலகைகளை எமக்கு அளித்த கையேடு


" குற்றப்பரம்பரை தலையை உடைத்த எமது தேசியத் தலைவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த இந்திய தேசிய விடுதலை போராளி வாய்ப்பூட்டு சட்டம் கண்ட வாய்மை வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் " என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் கூறினார்.

தென்னாட்டு சிங்கம்

மாவீரன் வெள்ளசாமித் தேவரின் கடைசி நிமிடம்

Saturday, November 12, 2011

Friday, November 11, 2011

Thursday, November 10, 2011

Wednesday, November 9, 2011

வெள்ளைச்சாமி தேவர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

 

சென்னை, நவ. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசுகளில் ஒருவருமான என்.வெள்ளைச்சாமி தேவர் நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வெள்ளைச்சாமி தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

வெள்ளைச்சாமி தேவர் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமனும்றீ இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தேவர் சமுதாய மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரது இழப்புக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் அ.இ.மூ.மு.க. கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, November 3, 2011

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

 
 
தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை

மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்

உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்

வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ

தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


```````````````````````````````````````````````````

***************************************************
```````````````````````````````````````````````````

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது

விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்

விருதுநகர் இருக்காது என உரைத்தார்
அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்


தமிழ்க்கடல்

நெல்லைக்கண்ணன்
69.அம்மன் சந்நிதித் தெரு
திருநெல்வேலி நகரம்
627 009
நெல்லை கண்ணன் தளத்தைப் பார்வையிட..


மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம்...

 

அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் நடிகை மனோரமாவின் தலையில் அடிபட்டது. இதனால் தலையில் ரத்தக்கட்டி உருவாகி ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நாளை அல்லது நாளை மறுநாள் அவரை வெளியே கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதுவரைக்கும் மனோரமாவை பார்க்க யாருககும் அனுமதி வழங்கப்படவில்லை.

Wednesday, November 2, 2011

கபிலன் வைரமுத்துவின் புதிய படைப்பு

 

பாவலர் வைரமுத்து அவர்களின் மகன் திரு. கபிலன் வைரமுத்து அவர்களுடயை இரண்டாவது புதினமான "உயிர்ச்சொல்" இப்போது பாடல் வடிவில் தன்னை அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழ் இலக்கிய உலகத்தைப் புதிய தடங்களில் அழைத்துச் செல்ல முனைந்திருக்கும் அவருடைய உழைப்பிற்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் நன்றி கூறுகிறது. இந்த 'உயிர்ச்சொல் நாவல் பாடல்' பிறப்பு கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியாக இருக்கிறது. இந்த மாதத்திற்குள் இவ்விழா நடைபெற உள்ளது. அனைவரும் களிப்புறும் வகையில் கழியும் இந்த மாதம் என்பதில் ஐயமில்லை.

Tuesday, November 1, 2011

தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவர் 104 வது ஜெயந்தி விழா

தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் அவர்களின் 104 வது ஜெயந்தி விழாவிற்கு வருகைதரும் உறவினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

 


மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் பசும்பொன் பூமியில், உறவுகளின் உணர்வுகள் சங்கமிக்கும் பொன்னான பொழுதில் வாஞ்சையோடு காத்திருப்போம்.

Popular Posts

Pages

Popular Posts