Monday, October 31, 2011
நெல்லையில் தேவர் ஜெயந்தி விழா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை ஜங்ஷனில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 104வது ஜெயந்தி விழா நேற்று நெல்லையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் : நெல்லை ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு காங்,. எம்பி., ராமசுப்பு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் விஜயன், காங்., நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதராஜா, சிந்தா சுப்பிரமணியன், ரமேஷ் செல்வன், வேணுகோபால், சண்முகராஜ், முருகேசன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாஜ., : நெல்லை மாவட்ட பாஜ., சார்பில் மாவட்ட தலைவர் கட்டளை ஜோதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் அழகுராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரமேஷ், நத்தம் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக., : நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக., சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட வக்கீல் அணி பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் ஜெயசந்திரன், தொழிற்சங்க தலைவர் தேவதாஸ், பகுதி செயலாளர்கள் சுந்தரராஜன், சேக், கவுன்சிலர் தானேஸ்வரன், ஆனந்தமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக., : நெல்லை மாவட்ட மதிமுக., சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் டேனியல் ஆபிரகாம், சரோஜினி, ஜோசப், பகுதி செயலாளர்கள் ஜெயின் உசேன், மணப்படை வீடு மணி, வடிவேல் பாண்டியன், பொன்.வெங்டேஷ், ஜமால், கல்லத்தியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாமக., : பாமக., கட்சி சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் சேந்திமங்கலம் சேவியர், பகுதி செயலாளர்கள் அழகர், விஸ்வநாதன், யூனியன் செயலாளர் சேதுபதி, யூனியன் தலைவர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூ.மு.க., : நெல்லை மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு தாழையூத்து ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் துரைராஜ், சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் : நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட தலைவர் பாலு தலைமையில் கைலாசபுரத்திலிருந்து பால் குட ஊர்வலம் நடந்தது. நிறைவாக ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் நிர்வாகிகள் கருணாகரபாண்டியன், சண்முகையா பாண்டியன், தங்கபாண்டியன், ராஜவேலு, இசக்கி பாண்டி, சுப்பையா, மருதுபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் துர்க்கை முத்து கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உசிலம்பட்டி கல்லூரி மாணவர்கள் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை நோக்கி ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் மேற்கொண்டனர் .
உசிலம்பட்டி ஐந்து கல் ராந்தாவில் உள்ள தேவர் சிலை முன் சிறப்பு பூஜையை பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் முருகன்ஜீ நடத்தினார்.
ஜோதி ஏந்தி தொடர் ஒட்டத்தை கல்லூரி முதல்வர் என்.பாலுச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கள்ளர் கல்விக் கழகத் தலைவர் எஸ்.மாசாணம் முன்னிலை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் அக்கினி, விஜயன், ராமன், சுப்புராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் குபேந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உலக சமாதானம் குறித்து சபதம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி ஏந்தி செக்கானூரணி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அய்யணன் அம்பலம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பசும்பொன் தேவர் நினைவிடம் சென்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும்
கோவில்பட்டி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென கோவில்பட்டியில் பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டியிலுள்ள பசும்பொன் தேசிய கழக தென்மண்டல அலுவலகத்தில் கழக நிறுவனத்தலைவர் வெள்ளை ச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டு பொதுமக்களால் தெய்வீகத்திருமகன் என்றழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான அன்னதான பந்தல் இன்று (அக்.29) பசும்பொன்னில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கழகத்தின் சார்பில் தொடர்ஜோதி ஓட்டம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கி ஜெயந்தி விழா நடைபெறும் தேவர் நினைவிடத்திற்கு நாளை (அக்.30) வந்தடைகிறது. தேவர்ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதவிர நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் மதுரை ஏர்போர்ட்டிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது, மறவர், கள்ளர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என்று அறிவிக்கவும், முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் முத்துராமலிங்க தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் தியான மண்டபம், தெப்பக்குளம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் வெள்ளைச்சாமித்தேவர் தெரிவித்தார். அப்போது பசும்பொன் தேசிய கழக பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துராஜ், தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழிற்சங்க செயலாளர் உதயாநாராயணன், மாநில பொருளாளர் ராமர், மாநில தொண்டரணி தலைவர் ஜஸ்டின், கோவில்பட்டி நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் இருந்தனர். இந்நிலையில் நாளை (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம் தலைமையில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் அருகேயுள்ள தேவர் சிலைக்கும், கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தேவ ர் சிலைக்கும் மாலை மரியா தை செய்துவிட்டு ஏராளமான பசும்பொன் தேசிய கழகத்தினர் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்
உசிலம்பட்டியில் தேவர் ஜயந்தி, குருபூஜை விழா
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் விழா மற்றும் 49-வது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளர் கல்விக் கழகத்தின் தலைவர் மாசாணம் தலைமையில் கல்லூரி முதல்வர் பாலுச்சாமி, பேராசிரியர்கள் விஜயன், அக்னி, வைரமணி, மணிகண்டன், ராமன் ஆகியோர் கலந்து கொண்டு உசிலம்பட்டியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முருகன்ஜீ தலைமையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ரெட்காசி, சங்கிலி, ரகு, மாவீரன், அக்னி பிரதாப் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.
நேதாஜி சேனைத் தலைவர் ஓ.கே.ராமதாஸ், நிர்வாகிகள் பழனி, ராஜபாண்டி, வீரணன் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா தலைமையில் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் மொக்கச்சாமி, ஒன்றியச் செயலர் சுரேஷ், அழகுராஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் தீபா பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்டச் செயலர் விஜயகாந்தன், வட்டார காங்கிரஸ் முத்துக் கண்ணன், சேவா தளம் அய்யாவு ஆகியோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பிரமலைக் கள்ளர் இளைஞர் பேரவைத் தலைவர் ராஜபாண்டி, மாநிலச் செயலர் பூபதி ராஜா வினோத். சுந்தர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஐ.ராஜா, வழக்குரைஞர் மணிகண்டன், பாலுச்சாமி, பரமத்தேவர், மலைச்சாமி, பாஸ்கர பாண்டியன் மற்றும் பலர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பொதுமக்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தி வணங்கினர். பின்னர் அவர்கள் பசும்பொன் நோக்கிச் சென்றனர்.
அடுத்த ஆண்டு தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேகம்: சேதுராமன்
பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருடைய நினைவிடத்தில் மக்கள் கலந்துகொண்டு, மலர் அஞ்சலி, மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் தேவரின் குருபூஜையை முன்னிட்டு இன்று காலை மலரஞ்சலி செலுத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், அடுத்த ஆண்டு தேவரின் 50 வது நினைவு தினத்தை ஒட்டி அவருடைய நினைவுக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு அக்.27ம் தேதி இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை வந்து செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நெல்லையில் தீவிர கண்காணிப்பு
திருநெல்வேலி : பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை (30ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பசும்பொன் தேவர் சிலைகள், படங்களுக்கு அனைத்து கட்சிகள், இயக்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலைவர்கள் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்ஸ்டாண்ட்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்புப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இரவு ரோந்துப்பணி மும்முரமாக நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க நாளை காலை முதல் மதியம் வரை 18 கட்சிகள், அமைப்புகளுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு இயக்க, கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ நடத்தினார்
தேவர் சிலைக்கு ஜெ., மரியாதை
சென்னை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னலில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெ., மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சென்னை நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு எம்.பி., சற்குண பாண்டியன், ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், வேலுதேவர், சித்ராகிருஷ்ணமூர்த்தி, ராமசாமி. முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், ரஞ்சன்குமார், முத்தமிழ் வைரராஜு, கலியமூர்த்தி, ராஜா, கண்ணன், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், வக்கீல் முத்துராமலிங்கம், கராத்தே சண்முகவேல், தேவேந்திரன், கிக்பாக்சர் ராஜா உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் ஜமுனா கேசவன், கன்னியப்பன், ஏழுமலை ஆகியோரும், பாரதீய ஜனதா சார்பில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.
நடிகர்கள் விவேக், கர்னாஸ், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவீது, அஷ்மத்துல்லா, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், நிர்வாகிகள் எம்.எம்.ஆர்.மதன், கருணா, ராஜசேகர், ராமு, சுனில், வைத்தியநாதன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.
சென்னை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தரமணி பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சந்திரபிரகாஷ், ஜெயராமன், மகளிர் அணி சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அகில இந்திய முக்குலத் தோர் பேரவை தலைவர் முருகவேல், பாலதண்டாயுத பாணி, பார் கவுன்சில் தலைவர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தியாகராஜன், பெரியசாமி, பாண்டியன், லிங்கம், பிரபு, பெரியதுரை, திருநாவுக்கரசு உள்பட மலர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால் குடம் எடுத்து வந்தனர்.
'Thevar Jayanthi' passes off peacefully in Ramanathapuram
Madurai, Oct 30 (PTI) Hundreds paid homage today to freedom fighter and Thevar community leader Pasumpon Muthuramalinga Thevar on his 104th birth anniversary at a village in Ramanathapuram district amidst tight security arrangement. DMK Treasurer M K Stalin, who paid homage at the memorial in Pasumpon village, told reporters that Chief Minister J Jayalalithaa had promised to provide gold-plated covering for the memorial and asked "what happened" to the promise. He also criticised the Chief Minister for not visiting the memorial on the occasion of the 'Thevar Jayanthi'. From the ruling party camp, ten AIADMK ministers including Finance Minister O Panneerselvam, Municipal Administration and Rural Development Minister K P Munusamy and Corporation Minister Sellur Raju paid homage. Muvendar Munnani Kazhagam leader N Sethuraman and Muvendar Munnetra Kazhagam leader Sridhar Vandayar were among others who paid homage. About 6,000 policemen were deployed in Ramanathapuram and other southern distrists ahead of the 'Jayanthi' in light of the police firing in Paramakkudi last month, in which seven persons were killed. Police had opened fire on September 11 when a group of dalits turned violent, setting ablaze vehicles and blocking traffic following the detention of their leader, John Pandian at Vallanadu in Tuticorin district. Violence broke out after news spread that Pandian had been detained at Tuticorin en route to Paramakudi to pay homage on the death anniversary of Dalit leader Imanuel Sekar. PTI SSN ARP
பசும்பொன்னில் தியான மண்டபம்: அமைச்சர் அறிவிப்பு
பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி மற்றும் 49வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, அரசின் சார்பிலான விழா நடைபெற்றது. இதன் பின்னர் பேசிய அமைச்சர் கோகுல இந்திரா, தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.37 லட்சம் செலவில் பசும்பொன்னில் தியான மண்டபம் ஒன்று கட்டப்படும் என்றார்.
மருத்துவமனையில் மனோரமா- கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்
பிரபல நடிகை மனோரமா தலையில் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரி்த்தார். இதேபோல திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.
பழம்பெரும் நடிகையான மனோரமா, சமீபத்தில் தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதனால் அவரது தலையில் அடிபட்டு விட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
அப்போது தலையில் ரத்தக் கசிவும், உறைவும் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அகற்ற நாளை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவர் கோமாவில் இல்லை என்றும் நல்ல நினைவுடன் நலமுடன் உள்ளதாக அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து மனோரமாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல நடிகை அனுஷ்காவும் நேரில் வந்து நலம் விசாரித்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்துள்ளனர்.
மனோரமாவின் உடல் நலம் குறித்து மகன் பூபதி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு நாள்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
Saturday, October 29, 2011
பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை விழா தொடங்கியது: புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்
பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவரின் குரு பூஜை விழா இன்று காலை தொடங்கியது. பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் 104-வது ஜெயந்தி விழாவும், 49-வது குருபூஜை விழாவும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் குருபூஜை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவரர் சுவாமிகள் தலைமையில் குழுவினர் யாகசாலை பூஜைகள் நடத்தினர். முதல் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) ஆன்மீக விழாவும், நாளை (29-ந்தேதி) தேவரின் அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழா வாகவும் கொண்டாடப்படு கிறது. இன்று காலை 8 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருண் ராய் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து தேவரின பக்தர்கள் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தியும் தொடர்ஜோதி ஏந்தி வந்தும் காணிக்கை செலுத்துவார்கள். 30-ந் தேதி நடைபெறும் குரு பூஜை விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவையட்டி பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வருகிற 30-ந்தேதி மரியாதை செலுத்த கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
காலை 4 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பூஜை. 4 1/2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய பார்வர்டு பிளாக் (இல.சந்தானம்), 5 மணி முதல் 5 1/4 வரை ஜனநாயக பார்வர்டு பிளாக், 5 1/4 முதல் 5 1/2 வரை இந்திய ஜனநாயக கட்சி, 5 1/2 முதல் 5 3/4 தேவர் தேசியப் பேரவை (கே.சி.திருமாறன்), 5 3/4 முதல் 6 தேவரின கூட்டமைப்பு (செல்லத்துரை பாண்டியன்), 6 முதல் 6 1/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன்), 6 1/4 முதல் 6 1/2 அகில இந்திய மருதுபாண்டியர் கழகம் (ராஜேந்திரன்), 6 1/2 முதல் 6 3/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், ராஜேந்திரன், 7 முதல் 7 1/4 தேவரின மறுமலர்ச்சி இயக்கம் (செந்தூர் பாண்டியன்), 7 1/4 முதல் 7 1/2 மரத்தமிழர் சேனை (புதுமலர் பிரபாகரன்), 7 1/2 முதல் 7 3/4 பசும்பொன் தேர்வு ஸ்குருசியல் யூமானிட்டி வெல்பர் அசோசியேஷன் (பூபதி ராஜா), 7 3/4 முதல் 8.00 தமிழக மக்கள் பார்வர்டு பிளாக் (எஸ்.மனோகரன்), 8 முதல் 8 1/4 தேசியவாத காங்கிரஸ் (டாக்டர் ராஜேஸ்வரன்) 8 1/4 முதல் 8 1/2 மூவேந்தர் முன்னேற்றக்கழகம் (ஸ்ரீதர் வாண்டையார்), 8 1/2 முதல் 8 3/4 முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை (இந்தி ராணி), 8 3/4 முதல் 9 ஸ்ரீமான் தேவர் அறக்கட்டளை (எஸ்.மனோகரன்), 9 முதல் 9 1/4 அகில இந்திய மூவேந்தர் முன்னணி (டாக்டர் சேதுராமன்), 9 1/4 முதல் 10 அமைச்சர்கள், 10 முதல் 10 1/2 அ.தி.மு.க., 10 1/2 முதல் 10 3/4 அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் (கருப்பையா, அரசகுமார்), 10 3/4 முதல் 11 காங்கிரஸ், 11 முதல் 11 1/4 தேசியவாத காங்கிரஸ் (மலைச்சாமி), 11 1/4 முதல் 11 1/2 தேசிய மறுமலர்ச்சிக்கழகம் (கார்த்திகேயன்), 11 1/2 முதல் 11 3/4 பாரதீய ஜனதா, பிற்பகல் 12 முதல் 12 1/2 தி.மு.க., 12 1/2 முதல் 12 3/4 இந்திய கம்யூனிஸ்டு, 12 3/4 முதல் 1.00 நாம் தமிழர் இயக்கம், 1 முதல் 1 1/2 ம.தி.மு.க., 1 1/2 முதல் 1 3/4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, 1 3/4 முதல் 2 ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி), 2 முதல் 2 1/4 தமிழ்நாடு சிவசேனா (தூதை செல்வம்), 2 1/4 முதல் 2 1/2 தமிழக முக்குலத்தோர் தேவர் சமூகம் (கணேச பாண்டியன்), 2 1/2 முதல் 2 3/4 பசும்பொன் தேசியக்கழகம் (வெள்ளைச்சாமி தேவர், கோவில்பட்டி,), 2 3/4 முதல் 3 பாரதீய பார்வர்டு பிளாக் (முருகன்ஜி), 3 முதல் 3 1/4 தே.மு.தி.க., 3 1/4 முதல் 3 1/2 வல்லரசு பார்வர்டு பிளாக் (அம்மாவாசி), 3 1/2 முதல் 3 3/4 பார்வர்டு பிளாக் (தினகரன்), 3 3/4 முதல் 4.00 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை), 4 முதல் 4 1/4 பார்வர்டு பிளாக் (நவமணி), 4 1/4 முதல் 4 1/2 தேவர் அறக்கட்டளை (பாலமுருகன், 4 1/2 முதல் 4 3/4 சரவணா நற்பணி மன்றம் தேவர் இளைஞர் நல்வாழ்வு மையம், 4 3/4 முதல் 5 தேவரின பாதுகாப்பு பேரவை, மாலை 5 மணிக்கு அரசு விழா நடைபெறுகிறது.
இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. ஏற்பாடுகளை கலெக்டர் அருண்ராய், டி.ஆர்.ஓ. ஜெயராமன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கமுதி தாசில்தார் சுகுமாறன், ஆணையாளர்கள் கந்தசாமி, சத்தியமூர்த்தி மற்றும் அதி காரிகள் செய்து வருகிறார்கள்.
ஆச்சிக்கு ஒன்றும் இல்லை ஆறுதல் தரும் தகவல்கள்
ஆச்சி மனோரமாவுக்கு அடிபட்டிருக்கிறது என்றால் சினிமா இன்டஸ்ட்ரி கொஞ்சம் ஷேக் ஆகதான் செய்யும். காலையில் வந்த செய்தி ஆச்சியின் அருமை பெருமை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் என்று செய்தி தாள்கள் அலறின. என்னதான் ஆனது மனோரமாவுக்கு?
பயப்படும்படியாக எதுவும் இல்லையாம். அவர் வழுக்கி விழுந்தது இப்போதல்ல. ஒரு மாதத்திற்கு முன்புதான். அப்போது நெற்றியில் லேசாக ரத்தம் கட்டியிருந்ததாம். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே முதலுதவி செய்து கொண்டாராம் அவர். சில தினங்களுக்கு முன் அடிபட்ட அதே இடத்தில் லேசாக வலி ஏற்பட, மருத்துவமனைக்கு சென்றாராம். மனோரமாவின் பேரன் ராஜராஜன் ஒரு மருத்துவர் என்பதால் அவரேதான் ஆச்சிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
முன்பு காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சையில்தான் இருக்கிறார் அவர். இதற்கிடையில் அவரை பார்க்க வரும் பார்வையாளர்கள் சகட்டுமேனிக்கு உள்ளே வந்ததால் மனோரமாவுக்கு இன்பெக்ஷன் ஏற்பட்டு ஜுரம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை சந்திக்க வருகிற அத்தனை பேரையும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.
Manorama admitted in Hospital
Popularly called as Aachi,veteran Manorama is reportedly admitted to hospital after she collapsed and fell down.She is reported to have sustain some serious head injury and she is treat at a private hospital in Chennai.Kodambakkam is shocked with this news and they are eagerly waiting to see Manorama back.Apart being close to film industry , she is the only actress who is most honored in both DMK and ADMK regimes.
Friday, October 28, 2011
தேவர் ஜெயந்தி விழாவுக்கு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: வாகனங்களில் மேற்கூரையில் அமர்ந்து செல்ல தடை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது ஜெயந்தி விழா மற்றும் 49-வது குருபூஜை விழா வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தமிழக உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா தலைமை தாங்கினார். டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஜி.பி. ராமானுஜம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 9 மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த விழாவில் பாதுகாப்புக்காக ஏற்கனவே 8 போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கூடுதலாக 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 6000-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு டி.ஐ.ஜி. தலைமையில் பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்படும். இந்த பாதுகாப்பு வருகிற 27-ந்தேதி முதலே மேற்கொள்ளப்படும்.
அதேபோல விழாவுக்கு செல்லும் மக்கள் வாகனங்கில் மேற்கூரையில் அமர்ந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிற தரப்பினர் மனம் பாதிக்கும் வகையில் வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்கள் எழுப்பக்கூடாது.
மேலும் காவல் துறையினர் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து செல்லக்கூடாது. மிகவும் பதற்றமான பகுதிகளாக கருதப்படும் இடங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
மீண்டும் வந்தார் மனோஜ்
தமிழ்சினிமாவில் பெருமைமிகு வாரிசு என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். வெளிநாட்டில் டைரக்ஷன் படிப்பை முடித்துவிட்டு டைரக்டராவதே லட்சியம் என காத்திருந்த இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவ்வப்போது படம் இயக்கப் போகிறார் என்று செய்திகள் கிளம்பும். அப்புறம் அந்த செய்திகளுக்கு உயிர் இருக்காது.
எப்படியோ, தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மனோஜ். பொதுவாக எதிர்மறை ஹீரோக்களுக்குதான் அதிக ஈர்ப்பு இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் என்பதை புரிந்து கொண்டவர், நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தை அரும்பு மீசை குறும்பு பார்வை என்ற படத்தை இயக்கிய வெற்றிவீரன் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
தேவர் ஜெயந்தி விழா நாளை தொடக்கம்: அரசியல் கட்சி தலைவர்கள் வருகிறார்கள்
பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் பிறந்தநாள் விழாவும், அவரது நினைவு நாள் விழாவும் அக்டோபர் 30-ந்தேதி வருகிறது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் இந்த விழா நாளை தொடங்கி 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (28-ந்தேதி) ஆன்மீக விழாவாகவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குரு பூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு சார்பில் நாளை பசும்பொன் கிராமத்தில் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் அருண்ராய் இந்த கண்காட்சியை திறந்து வைக்கிறார். 29-ந்தேதி கோவை ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார். 30-ந்தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் லட்சக்கணக்கான தேவரின தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் தமிழக அமைச்சர்கள், தி.முக. சார்பில் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. சார்பில் வைகோ, காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கபாலு, திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா சார்பில் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் 30-ந்தேதி பசும்பொன் கிராமத்திற்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் ஸ்ரீதர்வாண்டை யார், டாக்டர் சேதுராமன், பி.டி.அரசக்குமார் ஆகியோ ரது சார்பில் தனித்தனியாக அன்னதான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவர் நினைவிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் செய்து வருகிறார்.
தேவர் ஜெயநதி விழாவையொட்டி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
நந்தனத்தில் 30-ந்தேதி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்
முதல் -அமைச்சர் ஜெயலலிதா வருகிற 30-ந்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேவர் திருமகனாரின் 104-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் உருவசிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை விழா தொடங்கியது: புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்
பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவரின் குரு பூஜை விழா இன்று காலை தொடங்கியது. பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் 104-வது ஜெயந்தி விழாவும், 49-வது குருபூஜை விழாவும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் குருபூஜை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவரர் சுவாமிகள் தலைமையில் குழுவினர் யாகசாலை பூஜைகள் நடத்தினர். முதல் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) ஆன்மீக விழாவும், நாளை (29-ந்தேதி) தேவரின் அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழா வாகவும் கொண்டாடப்படு கிறது. இன்று காலை 8 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருண் ராய் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து தேவரின பக்தர்கள் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தியும் தொடர்ஜோதி ஏந்தி வந்தும் காணிக்கை செலுத்துவார்கள். 30-ந் தேதி நடைபெறும் குரு பூஜை விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவையட்டி பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வருகிற 30-ந்தேதி மரியாதை செலுத்த கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
காலை 4 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பூஜை. 4 1/2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய பார்வர்டு பிளாக் (இல.சந்தானம்), 5 மணி முதல் 5 1/4 வரை ஜனநாயக பார்வர்டு பிளாக், 5 1/4 முதல் 5 1/2 வரை இந்திய ஜனநாயக கட்சி, 5 1/2 முதல் 5 3/4 தேவர் தேசியப் பேரவை (கே.சி.திருமாறன்), 5 3/4 முதல் 6 தேவரின கூட்டமைப்பு (செல்லத்துரை பாண்டியன்), 6 முதல் 6 1/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன்), 6 1/4 முதல் 6 1/2 அகில இந்திய மருதுபாண்டியர் கழகம் (ராஜேந்திரன்), 6 1/2 முதல் 6 3/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், ராஜேந்திரன், 7 முதல் 7 1/4 தேவரின மறுமலர்ச்சி இயக்கம் (செந்தூர் பாண்டியன்), 7 1/4 முதல் 7 1/2 மரத்தமிழர் சேனை (புதுமலர் பிரபாகரன்), 7 1/2 முதல் 7 3/4 பசும்பொன் தேர்வு ஸ்குருசியல் யூமானிட்டி வெல்பர் அசோசியேஷன் (பூபதி ராஜா), 7 3/4 முதல் 8.00 தமிழக மக்கள் பார்வர்டு பிளாக் (எஸ்.மனோகரன்), 8 முதல் 8 1/4 தேசியவாத காங்கிரஸ் (டாக்டர் ராஜேஸ்வரன்) 8 1/4 முதல் 8 1/2 மூவேந்தர் முன்னேற்றக்கழகம் (ஸ்ரீதர் வாண்டையார்), 8 1/2 முதல் 8 3/4 முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை (இந்தி ராணி), 8 3/4 முதல் 9 ஸ்ரீமான் தேவர் அறக்கட்டளை (எஸ்.மனோகரன்), 9 முதல் 9 1/4 அகில இந்திய மூவேந்தர் முன்னணி (டாக்டர் சேதுராமன்), 9 1/4 முதல் 10 அமைச்சர்கள், 10 முதல் 10 1/2 அ.தி.மு.க., 10 1/2 முதல் 10 3/4 அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் (கருப்பையா, அரசகுமார்), 10 3/4 முதல் 11 காங்கிரஸ், 11 முதல் 11 1/4 தேசியவாத காங்கிரஸ் (மலைச்சாமி), 11 1/4 முதல் 11 1/2 தேசிய மறுமலர்ச்சிக்கழகம் (கார்த்திகேயன்), 11 1/2 முதல் 11 3/4 பாரதீய ஜனதா, பிற்பகல் 12 முதல் 12 1/2 தி.மு.க., 12 1/2 முதல் 12 3/4 இந்திய கம்யூனிஸ்டு, 12 3/4 முதல் 1.00 நாம் தமிழர் இயக்கம், 1 முதல் 1 1/2 ம.தி.மு.க., 1 1/2 முதல் 1 3/4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, 1 3/4 முதல் 2 ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி), 2 முதல் 2 1/4 தமிழ்நாடு சிவசேனா (தூதை செல்வம்), 2 1/4 முதல் 2 1/2 தமிழக முக்குலத்தோர் தேவர் சமூகம் (கணேச பாண்டியன்), 2 1/2 முதல் 2 3/4 பசும்பொன் தேசியக்கழகம் (வெள்ளைச்சாமி தேவர், கோவில்பட்டி,), 2 3/4 முதல் 3 பாரதீய பார்வர்டு பிளாக் (முருகன்ஜி), 3 முதல் 3 1/4 தே.மு.தி.க., 3 1/4 முதல் 3 1/2 வல்லரசு பார்வர்டு பிளாக் (அம்மாவாசி), 3 1/2 முதல் 3 3/4 பார்வர்டு பிளாக் (தினகரன்), 3 3/4 முதல் 4.00 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை), 4 முதல் 4 1/4 பார்வர்டு பிளாக் (நவமணி), 4 1/4 முதல் 4 1/2 தேவர் அறக்கட்டளை (பாலமுருகன், 4 1/2 முதல் 4 3/4 சரவணா நற்பணி மன்றம் தேவர் இளைஞர் நல்வாழ்வு மையம், 4 3/4 முதல் 5 தேவரின பாதுகாப்பு பேரவை, மாலை 5 மணிக்கு அரசு விழா நடைபெறுகிறது.
இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. ஏற்பாடுகளை கலெக்டர் அருண்ராய், டி.ஆர்.ஓ. ஜெயராமன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கமுதி தாசில்தார் சுகுமாறன், ஆணையாளர்கள் கந்தசாமி, சத்தியமூர்த்தி மற்றும் அதி காரிகள் செய்து வருகிறார்கள்.
எனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்
தெய்வ திருமகன் பட விமர்சனங்களை படிச்சி படிச்சி ரெண்டு மூணு நாளா காண்டாகி கெடக்கேன் .. விக்ரம் அப்டி நடிச்சிருக்கார் , விக்ரம் இப்டி நடிச்சிருக்கார்னு ஆளாளுக்கு அள்ளி வீட்டுக்கிட்டு இருக்கிறத பாக்கிறப்ப சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியலை .... இதை எல்லாம் படிக்கிறப்ப எனக்கு சில விஷயங்கள் புரிபடவே மாட்டேங்கிது .... இப்படி அசாதாரமான கதாபாத்திரம் ஒன்றில் உடலை வருத்தி கஷ்டபட்டு நடிப்பவனை மட்டும்தான் சிறந்த நடிகன் என்று நம் சமூகம் ஏற்று கொள்ளுமா? உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா? இப்படி ஒரு கேள்வி என் மனதில் தோன்றியவுடன் அதற்க்கு விடையாக என் மனதில் எழுந்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் ... இன்று கமலையோ வேறு சில நடிகர்களையோ சிலாகித்து பேசும் நாம், மறந்து போன ஒரு அற்புதம் அவர் ... அவரை பற்றி என்னுடைய பார்வையே இந்த பதிவு ...
தமிழ் சினிமாவுக்கு இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன் என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித விதமான கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில் பேசி நடிப்பதோ , இல்லை தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய் மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை .... இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ... அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய் நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர் படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ் அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில் பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....
சினிமாவில் நுழைய மிக எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில் அப்படிதான் நுழைந்தார் , அவர் தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும் அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம் அவமானப்படும் காட்சிகள் என்று எல்லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது ஆச்சர்யமாக தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த இயல்பான நடிப்பே ...அதன் பின்னர் அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும் பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன ... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல் வயபட்ட இளைஞன் ஒருவனே தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி இருப்பார் இயல்பாய் ...
மௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய் நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும் பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில் வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க முயன்று தோற்று இருக்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால் கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....
அடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள் பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில் ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான் ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில் கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...
கார்திக்கிடம் இருக்கும் இன்னொரு பெரிய திறமை , அவரின் இயல்பான நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது .... எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ... கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால் கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில் கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ... அவரின் குறும்புதனமும் , நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை .... அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில் இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ் சினிமாவில் வேறு ஆளே கிடையாது .... நவராசநாயகன் என்று தனக்கு தானே படம் கொடுத்து கொண்டாலும் , அந்த பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...
ஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ... இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ...
இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...
ஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ... இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ...
இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...
POST Link -- http://apkraja.blogspot.com/2011/07/blog-post_18.html
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
முத்துராமலிங்க தேவர் புகைப்படங்கள் - Muthuramalinga thevar Photo Collection
-
PASUMPON MUTHURAMALINGAM THEVAR PHOTO PASUMPON MUTHURAMALINGAM THEVAR (October...
-
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் கா...
-
Pasumpon Muthuramalinga Thevar Ayya was born to ate.Shri.Ukirapandiya Thevar and Indirani Ammaiyaar on a fine Friday 30th October i...
-
சுவாசிக்க -நறுமணமும் நேசிக்க -நல்மனமும் தேடும் எம் , தேவரின இளைஞர்களே ! அழுக்கேரும் -ஆடைகளை சலவைசெய்ய -அறிவுறுத்தும் ஆறாம்அறிவெடு...
-
In these columns I had traced the early life and meteoric rise of Pasumpon Sri Muthuramalinga Thevar (THEVAR) as an incomparable freedom fig...
-
Richard Nixon , the former American President , wrote a great book titled, ' LEADERS ' in which he observed as follows: "...
-
பசும்பொன் தேவருக்கு மாலை முரசு செலுத்தும் மரியாதைSaturday, October 29, 2011 1:44 PM பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 104-வது குருபூஜ...
-
**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின் சட்டமன்ற பேச்சு ***உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த் தாயகம் *** தமிழ்மொழி இன்று தோன்றியதல்ல . த...
Pages
Popular Posts
-
முத்துராமலிங்க தேவர் புகைப்படங்கள் - Muthuramalinga thevar Photo Collection
-
PASUMPON MUTHURAMALINGAM THEVAR PHOTO PASUMPON MUTHURAMALINGAM THEVAR (October...
-
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் கா...
-
Pasumpon Muthuramalinga Thevar Ayya was born to ate.Shri.Ukirapandiya Thevar and Indirani Ammaiyaar on a fine Friday 30th October i...
-
சுவாசிக்க -நறுமணமும் நேசிக்க -நல்மனமும் தேடும் எம் , தேவரின இளைஞர்களே ! அழுக்கேரும் -ஆடைகளை சலவைசெய்ய -அறிவுறுத்தும் ஆறாம்அறிவெடு...
-
In these columns I had traced the early life and meteoric rise of Pasumpon Sri Muthuramalinga Thevar (THEVAR) as an incomparable freedom fig...
-
Richard Nixon , the former American President , wrote a great book titled, ' LEADERS ' in which he observed as follows: "...
-
பசும்பொன் தேவருக்கு மாலை முரசு செலுத்தும் மரியாதைSaturday, October 29, 2011 1:44 PM பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 104-வது குருபூஜ...
-
**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின் சட்டமன்ற பேச்சு ***உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த் தாயகம் *** தமிழ்மொழி இன்று தோன்றியதல்ல . த...