கோவில்பட்டி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென கோவில்பட்டியில் பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டியிலுள்ள பசும்பொன் தேசிய கழக தென்மண்டல அலுவலகத்தில் கழக நிறுவனத்தலைவர் வெள்ளை ச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டு பொதுமக்களால் தெய்வீகத்திருமகன் என்றழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான அன்னதான பந்தல் இன்று (அக்.29) பசும்பொன்னில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கழகத்தின் சார்பில் தொடர்ஜோதி ஓட்டம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கி ஜெயந்தி விழா நடைபெறும் தேவர் நினைவிடத்திற்கு நாளை (அக்.30) வந்தடைகிறது. தேவர்ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதவிர நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் மதுரை ஏர்போர்ட்டிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது, மறவர், கள்ளர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என்று அறிவிக்கவும், முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் முத்துராமலிங்க தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் தியான மண்டபம், தெப்பக்குளம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் வெள்ளைச்சாமித்தேவர் தெரிவித்தார். அப்போது பசும்பொன் தேசிய கழக பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துராஜ், தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழிற்சங்க செயலாளர் உதயாநாராயணன், மாநில பொருளாளர் ராமர், மாநில தொண்டரணி தலைவர் ஜஸ்டின், கோவில்பட்டி நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் இருந்தனர். இந்நிலையில் நாளை (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம் தலைமையில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் அருகேயுள்ள தேவர் சிலைக்கும், கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தேவ ர் சிலைக்கும் மாலை மரியா தை செய்துவிட்டு ஏராளமான பசும்பொன் தேசிய கழகத்தினர் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்
Monday, October 31, 2011
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும்

Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முத்துராமலிங்க தேவர் புகைப்படங்கள் - Muthuramalinga thevar Photo Collection
-
சுவாசிக்க -நறுமணமும் நேசிக்க -நல்மனமும் தேடும் எம் , தேவரின இளைஞர்களே ! அழுக்கேரும் -ஆடைகளை சலவைசெய்ய -அறிவுறுத்தும் ஆறாம்அறிவெடு...
-
**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின் சட்டமன்ற பேச்சு ***உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த் தாயகம் *** தமிழ்மொழி இன்று தோன்றியதல்ல . த...
-
PASUMPON MUTHURAMALINGAM THEVAR PHOTO PASUMPON MUTHURAMALINGAM THEVAR (October...
-
Richard Nixon , the former American President , wrote a great book titled, ' LEADERS ' in which he observed as follows: "...
-
In these columns I had traced the early life and meteoric rise of Pasumpon Sri Muthuramalinga Thevar (THEVAR) as an incomparable freedom fig...
-
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளலார் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளலார் பெருமானின் திரு ...
-
Pasumpon Muthuramalinga Thevar Ayya was born to ate.Shri.Ukirapandiya Thevar and Indirani Ammaiyaar on a fine Friday 30th October i...
-
History of Pasumpon Muthuramalinga Thevar Ukkirapandi MuthuramalingaThevar ( உக்கிரபாண்டி முத்துராமலிங்க தேவர்) (Octo...
-
நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவ...
Pages

No comments:
Post a Comment