Total Pageviews

Wednesday, October 30, 2013

Thevar Jayanthi in Pasumpon முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி (அக்.30 1908)

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும் சிற்றூரில் 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் உக்கிரபாண்டி தேவர்- இந்திராணி அம்மையார். இவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒரே மகனாவார். இவருக்கு ஒரு வயது இருக்கும்போது தாயார் மரணம் அடைந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை
சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920-ம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார். தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts