Total Pageviews

Thursday, March 29, 2012

ஜெயலலிதாவுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை: சசிகலா திடீர் அறிக்கை-ஜெயா டிவியில் 'பிளாஷ்'!

 
 
 
jayalalitha sasikalaa
ஜெயலலிதாவுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரிகளே, என்று திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா. இந்த அறிக்கையால் பரபரப்பு எழுந்துள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் 'உடன்பிறவா சகோதரி' சசிகலா நடராஜன் கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும் அவரது உறவினர்கள் மொத்தபேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா மற்றும் உறவினர்களை வெளியேற்றினார் ஜெயலலிதா.
 
கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட பலர் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். திமுகவினருக்காகவே அறிமுகமான நில அபகரிப்பு வழக்குகள், சசிகலா வகையறா மீதும் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் தற்போது ஜெயிலில் உள்ளனர்.
 
பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகி இப்போது பதிலளித்து வருகிறார் சசிகலா. இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கை:
 
கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
 
1984-ம் ஆண்டில் முதன் முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார்.
 
1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு-பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவிற்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.
 
போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
 
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.
 
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.
 
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
 
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவிற்குத் துரோகம் நினைத்ததில்லை.
 
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவிற்கு எதிரான நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
 
இவ்வாறு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவிற்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.
 
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
 
பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா கூறியுள்ளார்.
 
ஜெயா டிவியில் பிளாஷ்:
 
சசிகலா வெளியிட்ட அறிக்கை, ஜெயா செய்தி சேனலில் இன்று காலை ஃப்ளாஷ் நியூஸாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும் போயஸ் கார்டனின் கட்டுப்பாட்டில் தான் சசிகலா இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஜெயா டிவியிலும் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தால்,
சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படுவதற்கான முன்னோட்டமாகவே இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.

Tuesday, March 20, 2012

சங்கரன் கோவிலில் தேவரின பாதுகாப்பு பேரவை

 

சங்கரன்கோவில் தேவரின பாதுகாப்பு பேரவைத் தலைவர் திரு .ந .பசும்பொன்பாண்டியன் அவர்களின் பூர்வீகம் என்பதாலும் இடைதேர்தலில் அப்பகுதி மக்களின் எண்ணங்கள் என என்பதனை அறிய வேண்டியும் ,இந்த இடை தேர்தல் நேரத்தில் இரட்டை மலை சீனிவாசனுக்கு ம் வைகுண்டருக்கும்
அரசு விழா பொதுவிடுமுறை அறிவித்த அ.தி .மு .க .அரசினை, இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும்,மேலும் அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது என்ற மதுரை செயற்குழுவின் முடிவின்படி கடந்த மூன்றாம் தேதி சங்கரன் கோவிலில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மற்றும் தேர்தல் கமிசன் அனுமதி ஆகியவற்றை முன்னரே வாங்கியும் காவல் துறை மேற்படி கூட்டம் நடத்துவதற்கு மிகுந்த தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .


தேவரின பாதுகாப்பு பேரவையினர் தங்கிஇருந்த வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட இருமங்குளம் கோவில் மண்டபத்திற்கு கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை வந்த காவல் துறை அதிகாரிகள் அமைப்பு நிர்வாகிகள் மூன்று நபர்களை கைது செய்திருக்கின்றனர் ,மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை "மரியாதையாக மண்டபத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் நடப்பதே வேறு " என்று அப்பட்டமாக மிரட்டியுள்ளார்கள். " தொகுதிக்கு வெளியே தங்கி இருக்கும் எங்களை மிரட்டுகிறீர்கள்,சங்கரன்கோவிலில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் உள்ளூர் ஆட்களா? என்று தேவரின பாதுகாப்பு பேரவையினர் கேட்டவுடன் நிர்வாகிகள் மூன்று பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். பின்பு மறுநாள் பெரியகொவிலான்குளம் என்ற ஊரில் தேவரின மக்களை சந்தித்தபோது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கார்கள் இரண்டை பறிமுதல் செய்துள்ளனர். தேவரின பாதுகாப்பு பேரவையினர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று கூறியும் அதனை ஏற்க மறுத்திருக்கின்றனர் ,இருந்தாலும் அவர்கள் மனம்தளராமல் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்திருக்கின்றனர் . அதிகாரிகள் அனைவரும் "நீங்கள் யாருக்கு ஆதரவு தரபோகிறீர்கள் என்பதனை சொல்லுங்கள் என்று கட்டயாபடுத்தியும் , கலந்தாய்வு கூட்டத்தில் எமது மக்களின் கருத்துகளை கேட்டுத்தான்,முடிவினை,அறிவிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். இறுதியில் மூன்றாம் தேதி காலை பதினோரு மணியளவில் மாலை கூட்டத்தை ரத்து செய்தார்கள் ,ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி இடத்தை மாற்றி வேறு இடத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு தேவரின பாதுகாப்பு பேரவை அ.இ.அ.தி.மு.க விற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. அ .தி .மு .க அரசினை வலியுறுத்தி இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும் , அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து களப்பணியும் செய்துள்ளது. இந்த ஆதரவு நிலைக்கு, கோரிக்கைக்கு அ .தி .மு .க அரசு எப்போது பதிலளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-

Sunday, March 18, 2012

தமிழாய்வின் தற்காலநிலை.

 
 
இன்றைய தமிழாய்வு எதை நோக்கிச் செல்கிறது ?
வளர்ச்சியையா?அழிவையா?
பட்டத்தையா? பணத்தையா?

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவது போலவும் குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போலவும் தமிழ் தமிழாய்வாளர்களிடம் சிக்கிக் கொண்டு பாடாய் படுகிறது.
இன்றைய தமிழாய்வு குறித்து கவிஞர் வைரமுத்து
குறிப்பிடும் போது

 பெரும்பாலும் ஆய்வுகள் இங்கே மேற்கோள் நிரப்பிய வைக்கோல்கள்

 கம்பராமாயணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலக்கணப் புலிகள்

 அகநானூற்றில் மார்க்ஸியம் தேடிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்.

 மதுரை வீதியில் கண்ணகி திருகி எறிந்ததைத் தேடிக்கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரர்கள்.

 சித்தர் பாடல்களில் உள்ளார்ந்த ஒளியை மறந்துவிட்டு அதன் சத்தங்களை ஆராய்ச்சி செய்யும் சப்தப் பித்தர்கள்.

 ஓர் ஆராய்ச்சி என்பது அலசிப்பார்த்து முடிவு சொல்ல வேண்டாமா?

 விடியாத தமிழ்நாட்டில் வெளிச்சம் கொளுத்த வேண்டாமா?

 இதை விட்டு விட்டு 'மன்னன்;' என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை பயின்று வந்தது?

 மலைநாட்டு மயில் எத்தனை முறை ஆடியது?

 சங்ககாலக் குரங்கு எத்தனை பழம் தின்று கொட்டை போட்டது?
இவையெல்லாம் ஆராய்ச்சிகளே இல்லை என்று மனம் நொந்து குறிப்பிடுகிறார்.இன்றைய தமிழாய்வை எண்ணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் …………… என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் செய்யப்படும் ஆய்வேடுகள் வணிகமயமாகிவிட்டன.

ஆம் ஐய்ந்தாயிரம் ரூபாய்க்கு எம்பில் ஆய்வேடுகளும்

பத்தாயிரம் ரூபாய்க்கு முனைவர் பட்ட ஆய்வேடுகளும் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

அன்றைய சூழலில் உ.வே.சாமிநாதையர் போன்ற கல்விப்புலம் சாராத ஆய்வாளர்கள் பலரும் எந்தப்பட்டங்களை எதிர்பார்த்தும் தமிழாய்வு செய்யவில்லை ஆனால் இன்று கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் நிலை மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.


Friday, March 9, 2012

காமெடி படங்களே ஜெயிக்கும் - நடிகர் விவேக்

 

புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் கஞ்சா கூட்டம் படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ் பேசும் தமிழச்சிகள் கஞ்சா கூட்டம் படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு.

எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க.

சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கனும் 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடனும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது.

நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச் சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர் அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். இ

வ்வாறு அவர் பேசினார்.

Tuesday, March 6, 2012

அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு

 

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு நா.பசும்பொன் பாண்டியன் அவர்கள் கூறியது.

" எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. சங்கரன் கோவில் தொகுதியில் ஒட்டுமொத்த மக்களும் அ.தி.மு.க விற்கு ஆதரவான நிலையை கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அ.தி.மு.க விற்கு எங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டுமென்று எங்களது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Monday, March 5, 2012

கார்த்திக் மகனுக்கு பயிற்சி அளிக்கும் அர்ஜுன்


பொதுவாக ஒரு நடிகரின் படத்தில் மற்றொரு நடிகர் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கே அதிகமாக அலட்டிக் கொள்ளும் இந்த காலத்தில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமிற்கு உடற் பயிற்சி அளித்து வருகிறார் அர்ஜுன்.
மணி ரத்னம் இயக்கும் கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கௌதம். இவருக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து பயிற்சிகளையும் அளித்து, தனக்கு அடுத்தபடியாக, கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் கூடிய அடுத்த ஹீரோவை உருவாக்கித் தந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அர்ஜுனும் கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குக் கீழ் பயிற்சி எடுத்துக் கொள்ளும்படி நான் கௌதமை அறிவுறுத்தினேன். அதற்கான பலன் கிடைத்துவிட்டது. தற்போது நல்ல எடை போட்டு, கட்டுக்கோப்பான உடலமைப்புடன் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் என்கிறார் அர்ஜுன் பெருமையுடன்.

JUNIOR VIKATAN ARTICLE - NAVAMANI AYYA , KATHIRAVAN SIR

 
 
 


Sunday, March 4, 2012

AINMK

 
 

Popular Posts

Pages

Popular Posts