Total Pageviews

Sunday, December 25, 2011

அணைக்காகப் பாரதிராஜா பேச்சு

 

முல்லைப் பெரியாறு அணைக்காக இன்று மே 17 இயக்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர்களைச் சந்தித்திப் போது திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் தண்ணீருக்கான தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்போது பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வரும் 30 ஆம் தேதி தேனி, கம்பம் பகுதியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் அவர் கூறும் போது, தேசியம் எனும் ஒரு சொல்லில் எங்கள் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டுள்ளது என்றார். அதனால்தான் 2 இலட்சத்திற்கும் கூடுதலான தொப்புகள் கொடி உறவான தமிழர்கள் சாகும் போது பார்த்துக் கொண்டு இருந்தோம் இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

டிச-25 அன்று வீர மங்கையர் தினம்

 
 

வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா, வருகின்ற டிச-25 அன்று சிவகங்கை நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அந்தநாளை அனைத்து இயக்கங்களும் "வீர மங்கையர் தினம்" மாக கொண்டாடி வருகிறது.

வீரமங்கை வேலுநாச்சியார் 215 வது நினைவு தினம்.

 





8-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.


இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.

கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.

அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.

விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.

Thursday, December 22, 2011

PROTEST

 
 

Tuesday, December 20, 2011

ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேற காரணம்

 

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முதல்வர் யார்?தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, December 18, 2011

DR.SETHURAMAN

 
 

USILAMAPATTI PASUMPON COLLEGE

 
 

''ெவறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் ேவண்டாம்!' ெவடிக்கிறார் பாரதிராஜா

 
 
 
 
 
 
 

வைரமுத்து சாடல்?

 

சென்னையில் இன்று விதார்த் நடித்த கொள்ளைக்காரன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர் தங்கர்பச்சான் பேசுகையில், இதுபோன்ற ஆடியோ விழாக்களெலலாம் தேவையே இல்லை என்று பேசத் தொடங்கியவர், தமிழனுக்கு எங்குமே மரியாதை இல்லை. முல்லை பெரியாறு பிரச்சினையில் அரசாங்கமும், கட்சிகளும் பேசி வருகின்றன. ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. இனி நாமே எதிர்ப்பை காட்ட வேண்டியதுதான். அதை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை நாம் வாங்கிய தேசிய விருதுகளை அவர்கள் முகத்தில் விட்டெறிய வேண்டும். நானெல்லாம் தேசிய விருது வாங்கியிருந்தால் அதை செய்திருப்பேன் என்று செம சூடாக பேசினார்.

ஆனால் இதன்பிறகு பேசிய கவிஞர் வைரமுத்து, இதுபோன்ற விழாக்கள் அவசியம் வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்கர்பச்சான் போன்றோர்களின் பேச்சை எங்குபோய் கேட்டுத்தொலைப்பது என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காரணம், ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் வாங்கியவர் வைரமுத்து. அவர் இருக்கிற மேடையில் இப்படி வாங்கிய தேசிய விருதுகளை விசிறியடிக்க தங்கர்பச்சான சொன்னதால் ஆவேசமாக விட்டார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

MUKKULATHOR ELUCHI KALAGAM

 
 

Tuesday, December 13, 2011

forward bloc

 
 

தீர்ப்பைத் தமிழில் தர வேண்டும் - சசிகலா

 

சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் வருமானத்திற்குக் கூடுதலாகச் சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடரப்பட்டு அது கர்நாடாகவின் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 08) அன்று நீதிமன்றம் வந்தது. அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானக் கோபாலன் நீதிபதியிடம் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வினாக்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரக்கோரினார்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்தத் தீர்ப்பைத் தமிழில் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டியுள்ளார்.

இயக்குனராகும் விவேக்!

 

காமெடி நடிகர் விவேக்கும் இயக்குனராகிறார்.

வடிவேலுவைத் தொடர்ந்து விவேக்கின் சினிமா மார்க்கெட்டும் சரிந்து கொண்டிருக்கிறது. அதனால் மார்க்கெட் இருக்கும்போதே தனது இயக்குனர் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்வோம் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக்.

அதாவது, இளையதலைமுறையினருககு பசுமை சூழலின் முக்கியத்துவதை விளக்கும் வகையில் அப்படத்தை இயக்குகிறார் விவேக். என்றாலும் டாகுமெண்டரி படம் போல் இல்லாமல் வழக்கமான காமெடி, மசாலா அயிட்டங்களையும் கலந்தே இப்படத்தை இயக்கிறாராம் விவேக்.

அவரிடம் இதில் உங்களுக்கு என்ன வேடம்? என்றால்,

நான் காமெடியனோ, இல்லை கதாநாயகனோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படம் பற்றி பேசி வருகிறேன். அது முடிவானதும் நான் என்ன வேடத்தில் நடிக்கிறேன் என்பதும் முடிவாகும் என்கிறார் விவேக்.

MADURAI MAYOR TO GOTO DELHI

 

மதுரை: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் கூட்டத்தில், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்கிறார். இந்தியாவில் 63 நகரங்களில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள், இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் மதுரைக்கு, 2006 ஜூன் 20ல் 2,496.98 கோடி ரூபாய் வழங்க மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை, டில்லியில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 63 நகரங்களின் மக்கள் பிரதிகள் பங்கேற்கின்றனர். நிதி ஆதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தின் இரண்டாம் பாகம் கிடைத்தால், கிடப்பில் கிடக்கும் பலதிட்டங்கள் உயிர் பெறும்.

MADURAI MEENAKSHI MISSION - RAMESH

 
 

Thursday, December 8, 2011

மருத்துவமனையிலிருந்து மனோரமா டிஸ்சார்ஜ்!

 
 
 
 
 
ஒரு மாதத்திற்கு மேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நடிகை மனோரமா இன்று, "டிஸ்சார்ஜ் ஆகிறார். குடும்பத்துடன் காளஹஸ்தி ‌கோயிலுக்கு சென்றபோது, தலையில் அடிபட்டு, கடும் தலைவலி காரணமாக, நடிகை மனோரமா, கடந்த அக்., 25ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரின் தலையில் ரத்தம் உறைந்தது கண்டறியப்பட்டது.
 
இதை சரிசெய்ய, கடந்த மாதம் 1ம் தேதி, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு, உடல் வீக்கம், சளி ஆகிய பிரச்னைகள் இருந்தன. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே, மனோரமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார் .



Tuesday, December 6, 2011

இயக்குனராகும் கார்த்திக்!

 

இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.

ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக். அதற்கான கதை விவாதம், கதாநாயகி தேடல் ஆகிய வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் நவரசம்.

Thursday, December 1, 2011

Comedy is my forte: Vivekh

 

Vivekh has ventured to do a role with negative shades in Marichaa, a Kannada film. A name to reckon with in Tamil cinema, he has acted as comedian in several hundred films.

Asked whether he would venture to do the lead role, Vivekh says, ' I want to remain as comedian because comedy is an important ingredient of a film. No audience goes to toilet when a comedian appears on the screen. The audience goes to toilet or for smoking if they do not like a stunt sequence or song sequence'.

Asked about his ambition, the veteran comedian says, ' I want to complete green mission set by former president APJ Abdul Kalam who had advised me to encourage the planting of saplings. He advised me to promote the planting of saplings through films. As per his advice, I have joined hands with various non-governmental organisations. The planting of saplings programme began six months ago. The target was to plant 10 lakhs saplings but we have planted 11 lakh saplings. Kalam Sir will plant twelfth lakh sapling at a tsunami hit village near Kadalur by end of January 2012′.

Popular Posts

Pages

Popular Posts