
செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் .கவுண்டமணியுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு. செந்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியில் இலஞ்சம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு ஆயில் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு ஒயின் ஷாப்பில் அட்டெண்டர் ஆக பணி புரிந்தார். பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டார். இது அவர் சினிமாவுக்குள் நுழைய உதவியாக இருந்தது. சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்முட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவ டாக்டர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு டாக்டர் ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
No comments:
Post a Comment