Total Pageviews

Tuesday, December 13, 2011

MADURAI MAYOR TO GOTO DELHI

 

மதுரை: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் கூட்டத்தில், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்கிறார். இந்தியாவில் 63 நகரங்களில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள், இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் மதுரைக்கு, 2006 ஜூன் 20ல் 2,496.98 கோடி ரூபாய் வழங்க மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை, டில்லியில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 63 நகரங்களின் மக்கள் பிரதிகள் பங்கேற்கின்றனர். நிதி ஆதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தின் இரண்டாம் பாகம் கிடைத்தால், கிடப்பில் கிடக்கும் பலதிட்டங்கள் உயிர் பெறும்.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts