Total Pageviews

143,303

Monday, October 31, 2011

அடுத்த ஆண்டு தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேகம்: சேதுராமன்

 

பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருடைய நினைவிடத்தில் மக்கள் கலந்துகொண்டு, மலர் அஞ்சலி, மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் தேவரின் குருபூஜையை முன்னிட்டு இன்று காலை மலரஞ்சலி செலுத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், அடுத்த ஆண்டு தேவரின் 50 வது நினைவு தினத்தை ஒட்டி அவருடைய நினைவுக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு அக்.27ம் தேதி இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை வந்து செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts