Total Pageviews

Friday, October 28, 2011

நவரச நாயகன் கார்த்திக் பற்றிய ஒரு அலசல்:


 
நவரச நாயகன் கார்த்திக் பற்றிய ஒரு அலசல்:
Picture
 தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடிப்பார் என  எதிர்பார்க்க பட்ட நடிகர் கார்த்திக் கால ஓட்டத்திலும் தனக்கென வகுத்து கொண்ட தவறான  கொள்கையினாலும்,கால்சீட் சொதப்பல் போன்ற காரண்ங்களால் தமிழ் சினிமாவிலிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க பட்டார்.

 தமிழ் சினிமாவிலிருந்து ஒதுக்க பட்டாலும் தமிழ் சினிமாவில் அவர் விட்டு சென்ற்
இடம் இன்னும் காலியாகவே உள்ளது என்றால் அது மிகை அல்ல.

அவரிடம் பல குறைகள் இருந்தாலும் ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் இன்றைய இளைய  தலைமுறையிடம் காணமுடியும்.

குறிப்பாக படித்த நுனி நாக்கில் ஆங்கிலம் பேசகூடிய அப்பாவியான கேரக்டர் என்றால்
அனைத்து நடிகர்களுக்கும் உடனே ஞாபகத்தில் வரகூடியது கார்திக்கின் கோகுலத்தில் சீதை  படம் தான். அந்த படத்தில் அவருடைய நடிப்பு பல நடிகர்களுக்கு ஒரு பல்கலை கலகம்.  உதாரணத்திற்கு பிரியமானவளே படத்தில் விஜயோட நடிப்பில் கார்த்திகோட தாக்கத்தை  காணலாம்.

அதே போல துருதுருப்பான காதலன் ரொமான்டிக் காதலன் என்றால் அனைவருக்கும் ஞாபகம்  வருவது அந்த மௌன ராகம் கேரக்டர்தான்.


நகரத்து கதைகளில் மட்டும் அல்ல கிராமத்து கதைகளில் கூட கதாபாத்திரத்துடன்
பொருந்தி விடுவார். கிழக்கு வாசல்,பொன்னுமணி,போன்ற கிராமத்து கதை அம்சம்
உள்ள  படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

 இவருடைய நடிப்பில் யாருடைய சாயலையும் காணமுடியாது.அந்த வகையில் நடிப்பில்  தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர்.  தொடர்ந்து மூன்று வருடம் பிலிம் பேர் விருதை வெண்ர பெருமை கமலுக்கு பிறகு இவறையே  சாரும்.


1988ம் வருடம் அக்னி நட்சத்திரம் படத்துக்காகவும்,1989ம் வருடம் வருஷம் பதினாறு
படத்துக்காகவும்,1990ம் வருடம் கிழக்கு வாசல் படத்துகாகவும் இவர் இந்த விருதை
வென்றிருகின்றார். இது அல்லாமல் 1993ம் வருடத்தின் பிலிம் பேர் விருதையும் இவர்
பொண்ணுமணி படத்துக்காக வென்றிருக்கின்றார்,

 தமிழ் நாட்டு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு முறையும்,நந்தி அநார்ட்
ஒருமுறையும் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது.

தமிழ் சினிமாவில் இவர் முன்னனி நடிகராக இருந்த போது அப்போதைய முன்னனி
நடிகர்களுடன் ஈகோ பார்காமல் சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவ்வாறு  சேர்ந்து நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தன.


நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியுடனும், நன்றி படத்தில் அர்ஜுனுடனும்,அக்னி
நட்சத்திரம், உரிமை கீதம்,குஸ்தி போன்ற படங்களில் பிரபுவுடமும்,ஊமை விழிகள், தேவன்  போன்ற படங்களில் விஜய காந்துடனும்,மௌன ராகம் படத்தில் மோகனுடனும்,உன்னிடத்தில்  என்னை கொடுத்தேன், ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடனும் சேர்ந்து  நடித்துள்ளார்.


அதே போள் இவர் கால்சீட் சொதப்புகின்றார் என்ற பேச்சு பரவலாக இருந்தாலும் இவரை
இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இவரை வைத்து இயக்குவதே இவரின் திறமைக்கு
சான்று..


மணிரத்தினம் இயகத்தில் மௌன ராகம்,அக்னி நட்சத்திரம், இராவணன் போன்ற
படங்களிலும்,ஆர்.வி.உதய குமார் இயக்கத்தில் உரிமை கீதம்,கிழக்கு வாசல்,பொண்ணு
மணி,நந்தவன தேரு போன்ற படங்களிலும்,இயக்குனர் ராஜ் கபூர் இயகத்தில் சின்ன
ஜமீன்,குஸ்தி,ஆனந்த போங்காற்றே போன்ற படங்களிலும்,ஆர்.ராஜேஸ்வர் இயக்கத்தில்
இதயதாமரை, அமரன் போன்ற படங்களிலும், பி.வாசு இயக்கத்தில் இது நம்ம போமி,சீணு,புலி  வேஷம் போன்ற படங்களிலும்,சுந்தர் .சி. இயக்கத்தில் இயக்கத்தில் உள்ளத்தை  அள்ளித்தா,மேட்டுக்குடி,உனக்காக எல்லாம் உனக்காக,உள்ளம் கொள்ளை போகுதே பொன்ற  படங்களிலும்,பாரதி ராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை,நாடோடி தென்றல் போன்ற  படங்களிலும், நடித்துள்ளார்.

இன்றைய தலைமுறை நடிகரான ஜெயம் ரவிக்கு பிடித்தமான நடிகர் இவர்தான் என்பது
பலபேறுக்கு தெரியாது.

 இவருடன் சேர்ந்து நடித்த பல நடிகைகள் பல பேர் மீண்டும் இவருடன் சேர்ந்து நடிக்க
ஆசைபடுவது உண்டு. நடிகை ராதா இவருடைய நட்பின் காரணமாவே தன்னுடைய மகளுக்கு கார்திகா  என பெயர் வைத்தார் என்ற பேச்சும் தமிழ் சினிமாவில் உண்டு. நடிகை குஷ்புவின்  வீட்டில் இருக்கும் ஒரே நடிகரின் போட்டோ நம்ம கார்த்திக் உடையது தான்.நடிகை மீனா  தனக்கு பொருத்தமான நடிகர் கார்த்திக் தான் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டது  குறிப்பிடதக்கது.

இவரை பற்றி பலபேர் பலவிதமாக கூறினாலும் இவர் இயக்குனர்களின் நடிகன் என்பதற்கு  இவரை மீண்டும் மீண்டும் இயக்கிய இயக்குனர்களே சாட்சி. இவர் விட்டு சென்ற இடம் இன்னும் தமிழ் சினிமாவில் காலியாகவே உள்ளது.அதை இனி  அவராகவே நிறப்பினால் தான் உண்டு. அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.


காத்திருபோம் நம்பிக்கையுடன்....


நடிகர் கார்த்திக் நடித்ததில் பிடித்த பத்து படங்கள்:

1.அலைகள் ஓய்வதில்லை
2.அக்னி நட்சத்திரம்.
3.வருஷம் பதினாறு
4.கிழக்கு வாசல்
5..அமரன்
6.நாடோடி தென்றல்
7.பொண்ணுமணி
8.உள்ளத்தை அள்ளிதா
9.உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
10.கோகுலத்தில் சீதை


எனது இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து உங்கள் ஓட்டையும்
கருத்தையும் சொல்லிட்டு போங்க............


தங்கள் வருகைக்கு நன்றி..

1 comment:

  1. YES BUT HE IS OBVIOUSLY MISSED HIS TALENT COZ' OF CHARACTERISTIC AND ALSO HE MISSED TO DEVELOP THE POLITICOS ALTHOUGH HUGE SUPPORT FROM THEVAR COMMUNITY

    ReplyDelete

Popular Posts

Pages

Popular Posts