Total Pageviews

Monday, August 5, 2013

கனவுக்காடு

வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்:
கனவுக்காடு
--------------------------------------------------
ஏனோ ,
கொஞ்சநாட்களாய்
என்சிந்தனை
எம்
தேவரினச்சூழலை -சுற்றியே
பயணிக்கிறது

பயண,
நேரக்கனவுகளில்கூட
பெட்ரோல்குண்டுவீச்சில்
பாதிக்கப்பட்டோர் -முகங்கள்
-தெரிகிறது

அரை
ட்ராயர் சிறுவனாய்
பெட்டிக்கடைக்கு
செல்கிறேன்

என்ன வேண்டும் ?
கேட்கிறார் கடைகாரர்

ஒற்றுமை வேண்டும்
சொல்கிறேன் நான்

என்ன கனவு இது !
இனிப்பா ? ஒற்றுமை !

மற்றவர்கள்
மாநாடு போடுகிறார்கள்
அதில்
கலந்துகொள்ள மந்திரிகள்வருகிறார்கள்

எம்மவர்களின்
மாநாடென்றால்மட்டும்
காலையில்செய்தி
ஏழெட்டு பெண்கள் -விதவையானார்கள்

ஏனிந்த முரண்பாடு !
தூக்கம் களைந்து
சாமத்தில் புலம்புகிறேன்

என்றோ ,
முடிந்துவிட்டது
ஏனோ மனம் -எரிகிறது

பாதிப்புகளின் -வெப்பத்தில்
கண்கள் -வியர்க்கிறது

நீதிகளின்
தீர்ப்புகளெல்லாம்
எம்
தேவரின -உணர்வுகளை
கேலிசெய்வதாக -எண்ணிக்கொண்டே
என்
எண்ணங்கள்
பாலைவனக்காடுகளில்
சந்தேகக் குதிரைகளில்தான்
சவ்வாரி செய்கிறது

நானும் ஒருநாள்
தனியே சென்று
கல்லெரிபட்டுச்சாவேன்

கலவர மரணமென்று
கணக்கைமுடிக்கும் -காவல்த்துறை

அதுவரை
கனவுக்காட்டில் -சுத்துகிறேன்
கவிதைகளால் -கத்துகிறேன்
----------------------------------------------------------
ஒற்றுமைக்காக
இரா- வீரசேகர் -பொருளாளர்
முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்
--------------------

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts