Total Pageviews

Saturday, August 24, 2013

காந்தி ஏன் சுடப்பட்டார் ? கோட்சேயின் வாக்குமூலம் - Gandhi was shot and why? Godse's confession

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின்
வாக்குமூலத்தின் சில வரிகள் **

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள்
நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்
அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத்
தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட
சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும்
விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல்
ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ்
சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால்,
இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக
அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின்
அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ்
இந்தியாவுக்கு வெளியில் மறைந்து விட்டார்.

பாகிஸ்தானில்
இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த
இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக
ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம்
பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது.


பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில்
வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய
அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்,
என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க
முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும்
ஆயிரக்கணக்கான இந்துக்கள்
படுகொலை செய்யப்பட்ட செய்தியைக்
கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்ப
ட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த
இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள்
விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர்.
இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர்.

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள்
கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது.
இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய
அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித்
துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார்.
அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய
கடமையிலிருந்து தவறிவிட்டார்.
பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம்
தெரிவித்ததன் மூலம் இந்த
தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர்
இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின்
தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார்.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts