Total Pageviews

Wednesday, August 21, 2013

பசும்பொன் தேவர் பற்றி திரு.வைகோ அவர்களின் உரை - vaiko speech about thevar


பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் உரை,கருத்தை படிக்காமல் இதில் உள்ள தேவர் என்ற சொல் உங்களுக்கு உறுத்தலாக இருக்குமென்றால் நீங்கள் படிக்காமல் சென்றுவிடுங்கள்.
-----------------------------------------------------------------------------------
-கி.பி 1923-

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.மீண்டும் துப்பாக்கிச் சூடு. 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் 14 பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும்,வெள்ளைக்கார காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.



அவன் கேட்கிறான்.‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’

உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான்.பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும்.இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது.நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார்.

---------------------------------------------------------------------------------------------
"ஆணவம் எல்லாம் அடங்கிடும் நேரம்,
கோட்டையும் கொடிகளும் நொடியினில் மாறும்"

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts